
JEE முதன்மைத் தேர்வானது அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்துள்ளார்.
ஜேஇஇ முதன்மை தேர்வு தொடர்பாக மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட அறிக்கையில், இந்திய தொழில் நுட்பக் கல்வி நிறுவனங்களில் ( ஐஐடி ) சேர்க்கை பெறுவதற்கான ஜேஇஇ முதன்மைத் தேர்வு அக்டோபர் 3 – ஆம் தேதி நடைபெறும் என்று தெரிவித்தார்.
ஜேஇஇ முதன்மை தேர்வானது கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகள் அனைத்தையும் முறையாக பின்பற்றி நடத்தப்படும் என்று தெரிவித்தார் . இதற்கு முன்னதாக ஜூலை 3 – ஆம் தேதி நடைபெறவிருந்த ஜேஇஇ முதன்மைத் தேர்வு கொரோனா தொற்று காரணமாக ஒத்திவைக்கப் பட்டது குறிப்பிடத்தக்கது.
நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை பெறுவதற்கு ஜேஇஇ முதல்நிலை ( மெயின்ஸ் ) தேர்வு நடத்தப்படுகிறது .அந்தத் தேர்வு ஜேஇஇ முதன்மைத் தேர்வை எழுதுவதற்கான தகுதித் தேர்வாகவும் கருதப்படுகிறது.