ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு..

நாடு முழுவதும் உள்ள இந்திய தொழில்நுட்ப கல்வி நிறுவனங்களில் சேர்வதற்கு ஜே.இ.இ. மெயின் தேர்வானது ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது.

நடப்பாண்டில் ஜே.இ.இ. மெயின் தேர்வு ஆகஸ்ட் 26, 27, 31 மற்றும் செப்டம்பர் 1 மற்றும் 2 ஆகிய தேதிகளில் 334 நகரங்களில் நடைபெற்றது. இதில் மொத்தம் 9.34 லட்சம் பேர் தேர்வெழுதினர்.

ஜே.இ.இ. மெயின் தேர்வு முடிவுகள் தேசிய தேர்வு முகமையின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் 18 பேர் முதலிடம் பிடித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்களில் ஆந்திர பிரதேசத்தில் இருந்து 4 பேர், ராஜஸ்தானில் இருந்து 3 பேர், தெலுங்கானா மற்றும் உத்தர பிரதேசத்தில் இருந்து தலா 2 பேர் என மொத்தம் 18 பேர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

தேர்வு முடிவுகளை பெற.. JEEMainResult2021

Next Post

இந்தியாவில் இன்றைய கொரோனா நிலவரம் : புதிதாக 27,176 பேருக்கு தொற்று..

Wed Sep 15 , 2021
நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 27,176 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இது முந்தைய நாள் (25,404) பாதிப்பை விட சற்று அதிகம் ஆகும்.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,33,16,755 ஆக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே நாளில் 284 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,43,497 ஆக உள்ளது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையின் […]
corona-updated-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய