
2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ முதல் நிலைத் தேர்வுகள் நாடு முழுவதும் இன்று தொடங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் இன்று தொடங்கப்பட்ட தேர்வுகள் பிப்ரவரி 26 வரை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜேஇஇ முதல் நிலைத் தேர்வில் இன்று (செவ்வாய்க்கிழமை) கட்டடவியலுக்கான இளநிலை படிப்பு தேர்வும் மற்றும் வடிவமைப்புகளுக்கான இளநிலை படிப்பு தேர்வும் இரண்டு நிலைகளாக(Shift) நடைபெற்றது.
2021 ஆம் ஆண்டிற்கான ஜேஇஇ பிரதான(Main) தேர்வானது ஆண்டுக்கு நான்கு முறை ஆங்கிலம் ,தமிழ் உட்பட 13 மொழிகளில் நடத்தப்பட உள்ளது.இதன் மூலம் ஒரு மாணவர் நான்கு முறையும் தேர்வை எழுதலாம்,இவற்றில் அவர் பெற்றுள்ள அதிகபட்ச மதிப்பெண்கள் மட்டுமே கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும்.
மத்திய உயர்கல்வி நிறுவனங்களில்(ஐஐடி ,என்ஐடி ) சேர்வதர்க்கான நுழைவுத் தேர்வானது 2 கட்டங்களாக நடைபெறும் .அவை முதல் நிலைத் தேர்வு மற்றும் பிரதான தேர்வு .இதில் ஜேஇஇ முதல் நிலைத்தேர்வுகள் இன்று தொடங்கப்பட்டுள்ளன .இதனை தொடர்ந்து மார்ச் ,ஏப்ரல் மற்றும் மே மாதங்களிலும் தேர்வானது நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.