
ஜேஇஇ(JEE),நீட்(NEET) தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் எந்தவித மாற்றமும் இல்லை என மத்திய கல்வி அமைச்சகம் சமீபத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது .இந்நிலையில் மாணவர்களுக்கு சில சலுகைளும் அறிவிக்கப்பட்டுள்ளது .இதன்படி கடந்த ஆண்டு போல் இல்லாமல் ,இந்த ஆண்டு மாணவர்களுக்கு வினாக்களை தேர்ந்தெடுப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது .
கடந்த 2020ஆம் ஆண்டில் ஜேஇஇ மெயின் தேர்விற்கு மாணவர்களுக்கு மொத்தம் கொடுக்கப்பட்ட 75 வினாக்களுக்கும் (இயற்பியல்,வேதியியல்,கணிதத்தில் தலா 25 கேள்விகள் வீதம் மொத்தம் 75) விடையளிக்க வேண்டும் என்ற பாடத்திட்டம் இருந்தது .தற்போது 2021ஆம் ஆண்டில் ,கடந்த ஆண்டு பாடத்திட்டமே தொடரும் நிலையில்,தற்போது 90 கேள்விகளிலிருந்து ஏதேனும் 75 கேள்விகளுக்கு மட்டும் விடையளித்தால் போதும் என்ற வாய்ப்பு மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
ஜேஇஇ தேர்விற்கு(JEE Main Exam) பிளஸ் 2 மதிப்பெண் வரம்பு தளர்வு:
2021-2022 கல்வி ஆண்டில்,ஜேஇஇ மெயின் தேர்வில் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் குறைந்தபட்சம் 75 சதவிகிதம் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் எனும் விதியை மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது .அதாவது ,NIT ,IIT ,திட்டம் மற்றும் கட்டடக்கலை நிறுவனங்கள் ,மத்திய அரசின் நிதி உதவியுடன் இயங்கும் தொழில்நுட்ப நிறுவனங்களில் சேர்வதற்கு பிளஸ் 2 வகுப்பில் மாணவர்கள் குறைந்தபட்சம் 75 சதவிகித மதிப்பெண்கள் பெற வேண்டும் என மத்திய கல்வி அமைச்சகம் மதிப்பெண் தளர்வு ஒன்றை அறிவித்துள்ளது .
ஜேஇஇ(JEE) தரவரிசை அடிப்படையில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் மாணவர்கள் சேர்வதற்கு குறைந்த பட்சம் 75 சதவிகிதம் மதிப்பெண்களை பெறவேண்டும் மற்றும் பட்டியலின /பழங்குடி மாணவர்கள் பிளஸ் 2 பொதுத் தேர்வில் 65 சதவிகிதம் மதிப்பெண்கள் பெறவேண்டும் எனவும் அறிவித்துள்ளது..