
நாளை (வியாழக்கிழமை) மாலை 3.41 மணியளவில் ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்தின் இரண்டாவது தளத்திலிருந்து பிஎஸ்எல்வி சி -50(PSLV C-50) செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது .இந்த செயற்கைக்கோளானது ஆறு உந்து விசை சக்தியுடன் உருவாக்கப்பட்டுள்ளது .
ஸ்ரீ ஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் ஆராய்ச்சி மையத்திலிருந்து ஏவப்படும் 77 வது ராக்கெட் பிஎஸ்எல்வி சி -50 செயற்கைக்கோள் என்பது குறிப்பிடத்தக்கது .
விண்ணில் வெற்றிகரமாக பாயவுள்ள பிஎஸ்எல்வி சி -50 செயற்கைகோள் இறுதிக்கட்ட பணிகள் நிறைவடைந்த நிலையில் அதன் 25 மணி நேர கவுன்டவுன் செவ்வாய்க்கிழமை (15 -12 -2020) பிற்பகல் 2 .41 மணிக்கு தொடங்கப்பட்டதாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது .
இந்த பிஎஸ்எல்வி சி -50(PSLV C-50) செயற்கைக்கோளுடன் சிஎம்எஸ் – 01 என்ற தகவல் தொடர்பு கொண்ட செயற்கைக்கோளும் விண்ணில் செலுத்தப்பட உள்ளது .இந்த சிஎம்எஸ் – 01 என்ற செயற்கைக்கோளானது தகவல் தொடர்பு வசதிக்கான சி -பேண்ட் அலைக்கற்றையை கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது .இதன் மூலம் பெறப்படும் அலைவரிசையை இந்திய பரப்பிலும் ,அந்தமான் நிக்கோபார் லட்ச தீவிலும் பயன்படுத்த இயலும் .
கொரோன தொற்றின் காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் (ISRO) ,ஆராய்ச்சி பணிகள் சுமார் 11 மாத காலமாக தடைப்பட்டிருந்தது.தற்போது இதன் செயல்பாடுகள் கடந்த மாதம் தொடங்கப்பட்டது .இதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் (நவம்பர்)- 7 ஆம் தேதி பிஎஸ்எல்வி சி -49 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது .இந்த பிஎஸ்எல்வி சி -49 செயற்கைக்கோளுடன் தலா 4 செயற்கைகோள்கள் என மொத்தம் 9 வெளிநாட்டு செயற்கைகோள்கள் விண்ணில் செலுத்தப்பட்டது
பிஎஸ்எல்வி சி -50 செயற்கைக்கோளுக்கு பிறகு இஸ்ரோ நிறுவனமானது,எஸ்எஸ்எல்வி(SSLV) மற்றும் ஜிஎஸ்எல்வி(GSLV) எப்-10 என பல்வேறு ஆய்வு பணி திட்டங்களை செயல்படுத்தப்போவதாக இஸ்ரோ அமைப்பு தெரிவித்துள்ளது .