இஸ்ரோ தயாரித்துள்ள அதிநவீன ரேடார் : அடுத்த ஆண்டு விண்ணில் செலுத்த திட்டம் …

பூமியின் மேற்பகுதியை துல்லியமாக படம் பிடிக்கும் திறமை கொண்ட எஸ்.ஏ.ஆர் (Synthetic Aperture Radar) ரேடார் சாதனத்தை இஸ்ரோ அமைப்பு தயாரித்துள்ளது.இஸ்ரோ அமைப்பானது தற்போது விண்வெளித் துறையில் பல்வேறு முயற்சிகளையும்,கண்டுபிடிப்புகளையும் நிகழ்த்தி வருகிறது .இதன் விளைவாக அதிநவீன ரேடார் ஒன்றை இஸ்ரோ வடிவமைத்துள்ளது .

இஸ்ரோ அமைப்பும்,அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும் இணைந்து முதல் முறையாக நிசார் என்ற செயற்கைகோளை அடுத்த வருடம் விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. இந்த செயற்கைகோளில் தனித்துவமான எல் பேண்டு (L-band) மற்றும் எஸ் பேண்டு (S-band) ரேடார்கள் பொருத்தப்பட உள்ளது .

இஸ்ரோ அமைப்பானது செயற்கைகோளை விண்ணில் செலுத்துவதற்கான ராக்கெட் மற்றும் எஸ் பேண்டு எஸ்.ஏ.ஆர். ரேடார் போன்றவற்றை வழங்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதேபோல் நாசா விண்வெளி அமைப்பானது அறிவியல் சார்ந்த அனைத்து தகவல்களையும் சேகரிப்பதற்கு எல் பேண்டு எஸ்.ஏ.ஆர் ரேடார் இருப்பிடத்தை அறிய உதவும் ஜிபிஎஸ் ரிசீவர்(GPS) போன்றவற்றை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரோ தலைவர் கே.சிவன் அவர்கள் ரேடார் சாதனத்தை வீடியோ கான்பரன்ஸ் வழியாக பங்கேற்று கொடியசைத்து அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்தார்.

நாசா விண்வெளி அமைப்பு இந்தியாவிலிருந்து பெறப்பட்ட ரேடார் சாதனத்துடன் மற்ற பிற பாகங்களை இணைத்து மீண்டும் இந்தியாவிற்கு அனுப்பும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து நிசார் செயற்கைகோள் விண்ணில் செலுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.

Next Post

நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் : மார்ச் 15 முதல்..

Thu Mar 11 , 2021
இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது .இதில் குறிப்பாக மகாராஷ்டிரா ,கேரளா ,தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது . கொரோனா தொற்று அதிகரிப்பால், நாக்பூரில் முழுப் பொதுமுடக்கம் அமல் படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .கடந்த சில நாட்களாக நாக்பூரில் கொரோனா தொற்று அதிகமாக பரவி வருகிறது.இதனைத் தொடர்ந்து நாக்பூரில் மார்ச் 15 முதல் 21 வரை முழுப் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அமைச்சர் […]
complete-lockdown-in-nagpur
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய