
தமிழ் வழியில் பட்டயப்படிப்புகள் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2021 – 2022ம் ஆண்டிற்கான உயர்கல்வி மற்றும் பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் இன்று நடைபெற்றது.இதில் சிவில், மெக்கானிக்கல் இன்ஜினியரிங் போன்ற படிப்புகள் தமிழ் வழியில் அறிமுகப்படுத்தப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.
பி.காம் பட்டயப்படிப்பில் நேரடியாக இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கு வழிவகை செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
திருவண்ணாமலை ,மயிலாடுதுறை, சேலம், சிவகங்கையில் திறந்தநிலை பல்கலைக்கு புதிய மண்டல மையங்கள் உருவாக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.