தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு முகவர் பணிகளுக்கு ஜூலை 9-ல் நேர்முகத் தேர்வு..

ஜூலை 9 ஆம் தேதி தபால் ஆயுள் காப்பீடு மற்றும் ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கான நேர்முகத்தேர்வு சென்னை தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தபால் அலுவலக மூத்த கண்காணிப்பாளர் டி.வி.சுந்தரி விடுத்துள்ள செய்தியில், தபால் ஆயுள் காப்பீடு, ஊரக தபால் ஆயுள் காப்பீடு நேரடி முகவர் பணிகளுக்கு விருப்பம் உள்ளவர்கள், தாம்பரம் தபால் அலுவலங்களின் மூத்த கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஜூலை 9 ஆம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் நேர்முகத் தேர்வில் கலந்துகொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்.

முகவர் பணிகளுக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்பவர்கள் மத்திய,மாநில அரசுகள் நடத்திய பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நேர்முகத் தேதியன்று விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆகவும், அதிகபட்ச வயது 50 ஆகவும் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை இல்லாத, சொந்த தொழில் செய்யும் படித்த இளைஞர்கள், காப்பீடு நிறுவனத்தின் முன்னாள் ஆயுள் காப்பீடு ஆலோசகர்கள், முகவர்கள், முன்னாள் ராணுவத்தினர், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சங்க ஊழியர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள், சுயஉதவிக் குழுவினர், கிராமத் தலைவர்கள், கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் தங்களது அசல் மற்றும் சான்றிதழ்களின் நகல்களுடன் நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் 4 லட்சத்தை கடந்த கொரோனா உயிரிழப்பு..

Fri Jul 2 , 2021
இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்று நேற்றைய பாதிப்பை விட இன்று சற்று வெகுவாக குறைந்துள்ளது .கடந்த சில வாரங்களாக தொற்று பாதிப்பு மெல்ல மெல்ல குறைந்து வருவது மக்களுக்கு சற்று ஆறுதலை கொடுத்துள்ளது. கொரோனா பாதிப்பு குறைந்ததையடுத்து அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகள் மெல்ல மெல்ல தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு திரும்புகின்றன. இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,617 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது .மொத்த பாதிப்பு 3,04,58,251 ஆக […]
covid-updates-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய