சர்வதேச பெண்கள் தினம் 2021 : ஓர் பார்வை ..

சர்வதேச பெண்கள் தினமானது இன்று (மார்ச் -8) உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது .பெண்களை போற்றும் மற்றும் சிறப்பிக்கும் விதத்தில் உலக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது.

பெண்கள் வாழ்வில் பல இன்னல்களையும் ,தோல்விகளையும் கண்டு துவண்டு விடாமல், அதனை எதிர்கொண்டு பல வெற்றிகளையும், சாதனைகளையும் புரிய இந்நாளில் அனைத்து பெண்களுக்கும் மகளிர் தின வாழ்த்துக்களை தெரிவிப்பதில் tamil.aptinfo மிக்க மகிழ்ச்சியடைகிறது.

சர்வதேச பெண்கள் தினம் தோன்றுவதற்கான காரணம்:

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1908-ம் ஆண்டு மார்ச் 8-ம் தேதி சுமார் 15,000 மேற்பட்ட உழைக்கும் பெண்கள் தங்களுக்கு வாக்களிக்கும் உரிமை கோரியும் , வேலை நேரத்தை குறைக்கவும் மேலும் தங்களது வருமானத்தை உயர்த்தவும் பேரணி ஒன்றை மார்ச் 8-ம் தேதி நடத்தினர் .இந்நாளை தேசிய பெண்கள் தினமாக அமெரிக்க சோஷியலிஸ்ட் கட்சி அறிவித்தது .

மார்ச் 8-ம் நாளினை சர்வதேச பெண்கள் தினமாக அனுசரிக்கவேண்டும் என கிளாரா ஜெட்கின் யோசனை ஒன்றை முன்வைத்தார் .1910-ம் ஆண்டு நடைப்பெற்ற, 17 நாடுகளைச் சேர்ந்த 100 பெண்கள் கலந்துகொண்ட சர்வதேச பெண்கள் மாநாட்டில் கிளாரா ஜெட்கின் அவர்கள் இந்த யோசனையை முன்மொழிந்தார் .

இதனைத் தொடர்ந்து பல நாடுகளில் பெண்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்தது .எனினும் ஐ.நா. அமைப்பு சர்வதேசப் பெண்கள் தினத்தை 1975-ம் ஆண்டு மார்ச் 8 தேதி முறைப்படி அறிவித்து கொண்டாடத் தொடங்கியது.தற்போது இது 108 வது சர்வதேச பெண்கள் தினமாகும். ( 2011 ஆம் ஆண்டு 100 – வது சர்வதேச பெண்கள் தினம் கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது ).

முதல் சர்வேதேச பெண்கள் தினத்தின் முழக்கம் “சமத்துவத்தை யோசி, அறிவுபூர்வமாக கட்டியெழுப்பு மற்றும் மாற்றத்துக்காக புதுமையாக சிந்தி” என்பதாகும்.

சமூகம், அரசியல், பொருளியல்,விண்வெளி போன்ற பல துறைகளில் பெண்கள் அடைந்துள்ள முன்னேற்றத்தை கொண்டாடுவதற்கான நாளாக இந்த நாள் உருவெடுத்துள்ளது.தற்போது பெண்கள் அனைத்து துறைகளிலும் தங்களது பங்களிப்பையும் ,பல சாதனைகளையும் புரிந்து வருகிறாரகள் .எடுத்துக்காட்டாக கல்பனா சாவ்லா,ரிது கரிதால்,மலாலா யூசுப்சாய் மற்றும் கமலா ஹாரிஸ் போன்றவர்கள் அரும்பெரும் சாதனைகளை படைத்தது இவ்வுலகிற்கு பெருமையை சேர்த்துள்ளனர் .

பெண் பிரதமர், பெண் ஜனாதிபதி, பெண் சபாநாயகர், பல பெண் முதலமைச்சர்கள், பெண் விளையாட்டு வீரர்கள், விண்வெளி வீராங்கனைகள் என்று உலகம் பெருமைப்பட சொல்லிக் கொண்டாலும் ,பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளும் ,அவமானங்களும் நடந்தேறிக்கொண்டேதான் இருக்கிறது .சமூக நீதி பேசும் பலரே, பாலினச் சமத்துவத்தை உணர்வதில்லை அல்லது உணர முயற்சிகளும் எடுப்பதில்லை .பெரும் அதிகாரத்தையும் ,தலைமையையும் கொண்டிருப்பவர்கள் பெண்களுக்கு நடக்கும் வன்கொடுமைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதும் இல்லை ,அதற்கான சட்ட வழிமுறைகளை நிறைவேற்றுவதும் இல்லை .

நவீன காலகட்டத்தில் பல துறைகளிலும் பெண்கள் வளர்ந்து வந்தாலும் அவர்களுக்கான அச்சுறுத்தலும் அதிகமாகிக் கொண்டே இருக்கின்றன .சமுக ஊடகங்கள் ,வலைத்தளங்கள் போன்றவற்றாலும் பெண்கள் பல இன்னல்களுக்கு உள்ளாகின்றனர் .எனவே சமூக ஊடகங்களை பெண்கள் விழிப்புணர்வோடு கையாள வேண்டும்.மேலும் பெண்களுக்கெதிரான கொடுமைகளை கண்டு அஞ்சி நிற்காமல், துணிந்து நின்று அதனை எதிர்க்கொள்வோம் என இந்நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்று அதனை உலகிற்கு அறியச் செய்வோம் .

Next Post

இந்தியாவில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று : மத்திய அமைச்சகம் ..

Mon Mar 8 , 2021
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது .இந்தியா முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 18,599 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது . மத்திய அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் ,இன்று காலை நிலவரப்படி புதிதாக 18,599 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .இதன்மூலம் நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,12,29,398 ஆக அதிகரித்துள்ளது உள்ளது .தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமானது […]
raising-corona-virus-in-india
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய