
ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடைபெற்று வரும் கோவா திரைப்பட விழா ,வரும் ஜனவரி மாதத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது .
கோவா திரைப்பட விழாவானது எண்டா்டெயின்மென்ட் சொசைட்டி ஆஃப் கோவா அமைப்பு மற்றும் இந்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சகம் இணைந்து ஆண்டுதோறும் நவம்பர் மாதம் நடத்தி வருகிறது .இத்திரைப்பட விழாவிற்கு உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமா திரைப்பட நட்சத்திரங்கள் பங்கு பெறுவார்கள் .
கொரோன அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு நடைபெறவிருந்த கோவா திரைப்பட விழா ,அடுத்த வருடம் ஜனவரி மாதம் நடைபெறுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் அறிவித்துள்ளார்.
ஜனவரி மாதம் நடைபெறவிருக்கும் திரைப்பட விழாவை இணையதளம் மூலமும் ,நேரடியாகவும் காண ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார் .ஜனவரி 16 ,2021 முதல் 24 ,2020 வரை நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது ..