
மாணவ ,மாணவியர் இலவசமாக தாங்கும் விடுதி வசதியுடனும்,கட்டணமில்லாமல் எம்.பில் (M .Phil) படிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
2021 – 22 ஆம் ஆண்டிற்கான ஆய்வியல் நிறைஞர் பட்டப்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்கவுள்ளது. இந்நிலையில் கட்டணமில்லாமல் எம்.பில் (M .Phil) படிக்க விண்ணப்பிக்கலாம் என்றும் உலக தமிழாராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
தமிழக அரசால் தோற்றுவிக்கப்பட்ட உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தமிழ்ப் பல்கலைக்கழக ஏற்புடன்,தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.