இன்றைய ராசி பலன்கள் : 31 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .இன்று தன்னம்பிக்கையுடனும் சுறு சுறுப்புடனும் காண்பீர்கள் .பண வரவு அதிகரிக்கும் .குடும்பத்தில் இருந்த சில சங்கடங்கள் நீங்கி மகிழ்ச்சியானது உண்டாகும் .வாழ்க்கைத்துணைவியால் மகிழ்ச்சியானது உண்டாகும் .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்ததைவிட கூடுதலாக இருக்கும் .சுப நிகழ்ச்சிகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நன்மையில் முடியும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .உடல் நலத்தில் கவனம் தேவை .பணவரவு நன்றாக அமையும் .முக்கிய பிரமுகர்களின் அறிமுகமானது கிடைக்கும் .அரசாங்க சம்பந்தமான காரியங்கள் கைக்கூடும்.குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடப்பது வீண் பிரச்சனைகளை தவிர்ப்பதற்கு வழி வகுக்கும் .வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமானது கிடைக்கும்

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கும் .சகோதரர்களின் வழியில் உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பண விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் .குடும்பத்தில் ஒரு சில மன கஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரதத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .

கடகம்

புதிய முயற்சிகள் தொடங்குவதற்கு ஏற்ற நாளாகும் .குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .உடன்பிறந்தவர்களின் வழியில் ஆதாயமானது உண்டாகும் .வியாபாரம் சம்பந்தமாக வெளியூர் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும் .கடன் பிரச்சனைகள் தீரும் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும்.வியாபார ரீதியாக பல போட்டிகளை சமாளிக்க நேரிடும்
.குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்வது மன நிம்மதியை தரும் .

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும்.பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் அவசியமாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ,இல்லையென்றால் கடன் வாங்கும் சூழல் நேரிடும் .புதிய முயற்சிகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் .உறவினர்களின் வழியில் சில சங்கடங்கள் ஏற்படலாம் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும் .சிலருக்கு பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டு .இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை .வெளியூர் பயணங்களை தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெரும் .

துலாம்

இன்று நீங்கள் சுறு சுறுப்பாகவும் ,பொலிவுடனும் காண்பீர்கள் .எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .வீட்டிற்கான தேவையான பொருட்களை வாங்குவீர்கள் .உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .புதிய வேலை வாய்ப்புக்கான செய்திகள் தேடி வரும் .பணியாளர்களின் ஒத்துழைப்பால் வியாபாரத்தில் லாபமானது கிடைக்கும் .

விருச்சிகம்

திருமணம் மற்றும் சுப காரியங்கள் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .எதிர்ப்பாராத பண வரவுகளும் ,திடீர் செலவுகளும் ஏற்படும் .குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .ஒரு சிலருக்கு மன குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .குடும்பத்தில் மரியாதையும் நன்மதிப்பும் உயரும்.
வியாபாரத்தில் லாபமானது மந்தமாகவே நடைபெறும்.பங்கு சந்தை முதலீட்டில் லாபமானது கிடைக்கும் .

தனுசு

இன்றைய நாள் மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.கொடுத்த கடன் விரைவில் வசூலாகும் . பிள்ளைகளால் மகிச்சியானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.நீண்ட நாள் நண்பர்களை சந்திப்பது மகிழ்ச்சி தரும்.பொருட்கள் சேர்க்கைக்கு வாய்ப்புகள் அதிகமாகும் .மனதில் உற்சாகமும், செயல்களில் பரபரப்பும் காணப்படும்.வியா பாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்களின் முயற்சிக்கு குடும்பத்தின் ஆதரவானது கிடைக்கும் . உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் .நினைத்த காரியங்கள் கைக்கூடும் .புதிய முயற்சிகள் சாதகமாக முடியும் .உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியினது உண்டாகும் .முக்கிய பிரமுகர்களின் அறிமுகமானது நன்மையை உண்டாக்கும்.சிலருக்கு பிள்ளைகளால் வீண் அலைச்சலும், செலவுகளும் ஏற்படக்கூடும்.

கும்பம்

இன்று நீங்கள் மன உறுதியுடனும் ,தன்னம்பிக்கையுடனும் முடிவு எடுப்பீர்கள் .எடுத்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .மனதில் உற்சாகமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமானது அதிகரிக்கும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் துணிச்சலுடன் செயல்படுவீர்கள் .புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். சிலருக்குத் தாய்மாமன் வழியில் ஆதாயம் உண் டாகும்.சிலருக்கு எதிர்பார்த்த நற்செய்தியானது வந்துசேரும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் அதிகரிக்கும் .

Next Post

அமெரிக்க அதிபர் தேர்தல் 2020 : அடுத்த அதிபர் யார் ? டொனால்ட் டிரம்ப் - ஜோ பைடன் ?

Sat Oct 31 , 2020
அமெரிக்க அதிபர் தேர்தலானது நவம்பர் 3 ஆம் தேதி நடக்கவுள்ள நிலையில் ,இறுதி கட்ட பிரச்சாரமானது உச்சகட்டத்தை எட்டியநிலையில் இருக்கிறது .அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடவுள்ள முக்கிய போட்டியாளர்களான டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜோ பைடன் ஆகியோர் முக்கிய நிலையில் உள்ளனர் .தற்போதைய அதிபரான டொனால்ட் டிரம்ப்ன் பதவிக்காலமானது நவம்பர் மாதத்தோடு முடியும் தருவாயில் அடுத்த அதிபருக்கான தேர்தல் காலம் மும்மரமாகிவருகிறது . அமெரிக்க அதிபர் தேர்தலில் ரிபப்ளிகன் கட்சியின் […]
US-election-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய