இன்றைய ராசி பலன்கள் : 30 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் ,உற்சாகமாகவும் காண்பீர்கள்.உறவினர்களின் வருகையால் இல்லத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .பண வரவானது அதிகரிக்கும் .சுப செய்திகள் வீடு தேடி வரும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் பெருமை ஏற்படும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியானது கிடைக்கும் .குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.உறவினர்கள் ஆதரவாக இருப்பார்கள் . வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .குடும்பத்தில் உள்ளவர்களிடம் விட்டுக்கொடுத்து போவதன் மூலம் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத் துணைவழி உறவினர்கள் உதவிகரமாக இருப்பார்கள்.வியாபாரத்தில் புதிய யுக்திகளை மேற்கொண்டால் நல்ல முன்னேற்றம் இருக்கும் .

கடகம்

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .நண்பர்களின் சந்திப்பால் மகிழ்ச்சியும் உற்சாகமும் பெறுவீர்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .கடன் பிரச்சனைகள் தீரும் .குடும்பத்தில் மன மகிழ்ச்சி உண்டாகும் .

சிம்மம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.குடும்பத்தில் பெரியவர்களின் அன்பையும் ,ஆலோசனைகளையும் பெறுவீர்கள் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உறவினர்கள் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி ஏற்படும்.வியாபாரத்தில் எதிர்பார்த்தபடியே லாபமானது கிடைக்கும் .

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடனும் ,கவனமாகவும் நடத்தல் அவசியமாகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் வீண் விவாதங்களையும் ,வீண் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .உறவினர் வருகை உற்சாகம் தரும்.பிள்ளைகள் நீங்கள் சொல்லும் அறிவுரையைக் கேட்டுக்கொள்வார்கள். வியா பாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும்.

விருச்சிகம்

இன்று நீங்கள் எடுத்த காரியங்கள் வெற்றிகரமாக முடியும் .எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் .எதிர்பாராத பணவரவுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.வீட்டின் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் இருந்த எதிர்ப்புகள் நீங்கி முன்னேற்றம் அதிகரிக்கும் .

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் நினைத்ததை நிறைவேற்றும் நாளாகும் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும்.கணவன் மனைவி இடையே இருந்த மனக்கசப்புகள் நீங்கும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .ஆடை ,ஆபரணங்கள் வாங்கி மகிழ்வீர்கள் .

மகரம்

இன்று எந்த ஒரு செயலிலும் சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .மற்றவர்களுடன் வாக்குவாதம் செய்வதைத் தவிர்க்கவும். உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்படும். பொறுமையாக இருப்பது அவசியம்.தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்களை தீட்டுவீர்கள் .உறவினர்களால் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .புதிய நட்பு மனதிற்கு மகிழ்ச்சியை
தரும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று நீங்கள் முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாளாகும் .மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும் .உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ் ச்சியும் ,செலவுகளும் அதிகமாகும் .திருமணம் போன்ற சுப காரியங்கள் கைக்கூடும்.வியாபாரத்தில் பணியாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

மீனம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியும் ,ஒற்றுமையும் அதிகரிக்கும் .புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .தாயின் தேவையைப் பூர்த்தி செய்வீர்கள். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தருவார்.திருமணம் போன்ற சுப காரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றமானது உண்டாகும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம்போல் இருக்கும்.

Next Post

Samsung Galaxy M02 : சிறப்பம்சங்கள் என்னனென்ன ?

Mon Nov 30 , 2020
சாம்சங் நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போனான சாம்சங் கேலக்ஸி எம் 02 மாடல் இந்தியாவில் விரைவில் அறிமுகமாகவுள்ளது .இந்தியாவில் இந்த ஆண்டு தொடக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட கேலக்ஸி எம் 01 ஸ்மார்ட்போனின் வரிசையில் சாம்சங் கேலக்ஸி எம் 02 வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது ,எனினும் சாம்சங் கேலக்ஸி எம் 02 ஸ்மார்ட்போனின் தகவல்களை சாம்சங் நிறுவனத்தால் இதுவரை அதிகாரபூர்வமாக எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை . Samsung Galaxy M02 ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் : […]
samsung-galaxy-m02-smartphone
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய