இன்றைய ராசி பலன்கள் : 28 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு சந்தோசம் நிறைந்த நாளாக அமையும் .இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,மன மகிழ்ச்சியுடனும் செயல்படுவீர்கள்.சிலருக்கு திடீர் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும்.

ரிஷபம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும் .வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்லுதல் அவசியமாகும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் தாமதம் உண்டாகலாம் .உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும்

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இழுபறியாக இருந்த காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும் . பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கும் .எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சிலருக்கு தந்தையின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.கணவன் மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .

கடகம்

கடக ராசி நண்பர்களே திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் அதிகரிக்கும் .மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .உடன் பிறந்தவர்களால் நன்மையானது உண்டாகும் .தேவையற்ற வீண் பிரச்சனைகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும் .

சிம்மம்

இன்று பண வரவு அதிகரிக்கும் ,அதற்கேற்றாற்போல் செலவுகளும் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் ஒரு சில நெருக்கடிகள் உண்டாகலாம்.உறவினர்கள் மூலம் கிடைக் கும் தகவல் மகிழ்ச்சி தரும். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.சகோதரர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமாகவும் ,கவனமாகவும் நடத்தல் அவசியமாகும் .குடும்பத்தில் தேவையற்ற தலையீடுகளை தவிர்க்க வேண்டும் .மற்றவர்களிடம் பேசும்போது பேச்சில் கவனம் தேவை .புதிய முயற்சிகளைத் தவிர்ப்பது நல்லது.வியாபாரத்தில் விற்பனை வழக்கம்போலவே இருக்கும்.

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் உற்சாகத்துடனும் ,சுறுசுறுப்பகவும் செயல்படுவீர்கள் .பணம் கொடுக்கல் வாங்கலில் திருப்திகரமாக அமையும் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.உங்கள் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஒத்துழைப்பு தருவார். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள்.

விருச்சிகம்

கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.சிக்கனமாக செயல்பட்டால் கடன் பிரச்சனைகளை தீர்க்கலாம் .நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும்.உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .பண வரவு தாராளமாக இருக்கும் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும் .

தனுசு

எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .புதிய முதலீடுகளை தவிர்த்தல் நல்லது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆனால், திடீர் செலவுகளால் கையிருப்பு கரையும். கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .சுப காரிய விஷயங்களில் முன்னேற்றமானது அதிகரிக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும்.

மகரம்

புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.உங்கள் முயற்சிக்கு உங்கள் துணைவி ஆதரவாக இருப்பார்கள் .எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும்.புதிய பொருட்கள் வாங்கும்போது கவனம் தேவை .பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு . வியாபாரம் வழக்கம் போலவே இருக்கும்.ஒரு சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்ட வாய்ப்புகள் ஏற்படும்.

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு பண வரவு அதிகமாக இருக்கும் .திருமணம் போன்ற சுப காரியங்களில் முன்னேற்றம் உண்டாகும் .சிலருக்கு புதிய ஆடை, ஆபரணங்களின் சேர்க்கை உண்டாகும்.தந்தைவழியில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் நன்மதிப்பையும் ,ஆலோசனைகளையும் பெறுவீர்கள் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .

மீனம்

மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.உத்தியோகம் ரீதியாக பல வாய்ப்புகள் தேடி வரும் .வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கி முன்னேற்றமானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

Next Post

திரையரங்குகளில் மாஸ்டர் திரைப்படம் : படக்குழு அறிவிப்பு

Sat Nov 28 , 2020
விஜய் நடிக்கும் மாஸ்டர் திரைப்படத்தை திரையரங்குகளில் வெளியிடப்போவதாக படக்குழு அறிவித்துள்ளது. விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படமானது கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது,ஆனால் கொரோனா தொற்றின் பொது முடக்கம் காரணமாக மாஸ்டர் திரைப்படம் வெளிவருவதில் தாமதம் ஆனது . மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு காரணமாக பல்வேறு வதந்திகள் பரவி வரும் நிலையில் ,இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக படக்குழு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது ,இதில் […]
master-movie-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய