இன்றைய ராசி பலன்கள் : 28 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும், உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள்.எதிர்பார்த்த உதவியானது தந்தையின் மூலம் கிடைக்கும் .திருமணம் மற்றும் சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட மனக்கசப்புகள் நீங்கி அன்பும் நெருக்கமும் அதிகமாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தரும் .தாயின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் .மற்றவர்களிடம் பேசும்போது நிதானமும் கவனமும் அவசியமாகும் .சிலருக்கு பண வரவுகளும் ,திடீர் செலவுகளும் ஏற்படலாம் .கணவன் மனைவி இடையே ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியமாகும் .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எந்த செயலிலும் உற்சாகமாக செயல்படுவீர்கள் .பண விஷயத்தில் வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக செயல்படுதல் அவசியமாகும் .உத்தியோகத்தில் நிதானமும் , கவனமும் தேவை . உங்கள் வாழ்க்கைத்துணைவியின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரத்தில் கனிவான அணுகுமுறையானது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .

கடகம்

இன்று உங்கள் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .கணவன் மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .உத்தியோகத்தில் பதவிஉயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாகும் .சுப காரியங்கள் கைக்கூட வாய்ப்புகள் அதிகமாகும்.எதிர்பார்த்த பணம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம் .வியாபாரத்தில் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் முக்கிய முடிவுகளை தவிர்த்தல் நல்லது .எதிலும் கவனமுடன் செயல்படுதல் அவசியமாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .உத்தியோகத்தில் முக்கிய கோப்புகளில் அலட்சியம் வேண்டாம் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி சுபம் உண்டாகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .

கன்னி

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும்,ஒற்றுமையும் உண்டாகும் .திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளுக்கு உகந்த நாளாக அமையும் .இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் . மற்றவர்களிடம் பேசும்போது நிதானமும் கவனமும் அவசியமாகும் .

துலாம்

துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .பழைய கடன்கள் விரைவில் வசூலாகும் .மற்றவர்களிடம் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,புதிய யுக்திகளையும் கையாளுவீர்கள் .வழக்கு சம்பந்தமான பிரச்சனைகள் நீங்கும் .

விருச்சிகம்

இன்று நீங்கள் கவனமுடனும் நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சியானது உண்டாகும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வீண் விவாதங்களையும் ,பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது.வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .சொத்துக்களை வாங்குதல் மற்றும் விற்றலில் கவனம் தேவை .

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் உற்சாகத்துடனும் காண்பீர்கள் .எதிர்பார்த்த காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பண வரவுகள் அதிகரிக்கும் .குடும்பத்தினருடன் ஏற்பட்ட சில சங்கடங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் .சகோதரர்களால் உதவியானது கிட்டும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதல் மகிழ்ச்சியை அளிக்கும் .

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .தைரியமாக சில முடிவுகளை எடுப்பீர்கள் .தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாகும் .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .எதிர்பார்த்த பணமானது வந்து சேரும் .எதிர்ப்பாராத செலவுகளும் உடன் இருக்கும் .குடும்பத் தேவைகள் அனைத்தும் பூர்த்தியாகும் .உழைப்பிற்கு ஏற்ற ஊதியமானது கிடைக்கும் .

கும்பம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .நீங்கள் எடுக்கும் அணைத்து முயற்சிகளுக்கும் உங்கள் துணைவியின் ஆதரவானது கிடைக்கும் .கடன் கொடுத்த பணமானது வசூலாகும் .நெருங்கிய உறவினர்களிடம் வீண் விவாதத்தை தவிர்க்கவும் .உங்களுக்கு புதிய அறிமுகங்கள் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும் .வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே இருக்கும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் மன உறுதியுடனும் செயல்படுவீர்கள் .வேலை சம்பந்தமான நல்ல வாய்ப்புகள் தேடி வரும் .குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .உடல் ஆரோக்கியத்தில் கவனமானது அவசியமாகும் .சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றி அடையும் .வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்து நடப்பது ,வியாபார முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 29 -10 -2020

Thu Oct 29 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,மனதில் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்க வாய்ப்புகள் அதிகம் .புதிய முயற்சிகளில் அதிக கவனம் தேவை .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .எதிர்பார்த்த உதவியானது வழக்கை துணைவியின் வழியில் கிடைக்கப்பெறும் .வியாபாரத்தில் ஒரு சில இடையூறுகள் ஏற்பட்டாலும் அதை தவிர்த்து முன்னேற்றம் அடைவீர்கள் . ரிஷபம் இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .பல வகைகளிலும் […]
indraya-raasi-palangal-29-10-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய