
மேஷம்
மேஷ ராசி அன்பர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவும் ,அதிர்ஷ்டமான நாளாகவும் அமையும். .இன்று பொருளாதார ரீதியாக எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் மற்றும் நிதி நிலைமை சிறப்பாகவும் அமையும் .இன்று உங்கள் குடும்பத்ததில் மகிழ்ச்சியும் ,குடும்பத்திற்கான செலவுகளும் கட்டுப்படுத்தப்படும் .உங்கள் குழந்தைகளின் கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .நீங்கள் உற்சாகமாகவும் ,நல்ல சுறுசுறுப்புடனும் இருப்பீர்கள் .
ரிஷபம்
இன்று உங்கள் வியாபாரத்தில் இருந்த பிரச்சனைகள் மற்றும் சிக்கல்கள் குறைந்து,லாபம் ஆனது கிட்டும் .உங்கள் குழந்தைகளின் ஆரோக்கியத்தை கவனித்து வரவேண்டும் ,இல்லையென்றால் உங்கள் குழந்தைகளின் உடல்நலதிற்காக சிறு தொகையை செலவிட நேரிடும் .உறவினர்களின் வருகையால் இன்று உங்கள் செலவீனங்கள் அதிகரிக்க கூடும் .உங்கள் துணைவி வழி சொந்தங்களால் உதவியானது கிடைக்கும் .இன்று சந்திரன் ஆனது உங்கள் ராசிக்கு பத்தாம் வீட்டில் இருக்கிறார் .
மிதுனம்
மிதுனம் ராசி அன்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகளை மற்றும் அவர்களை அனுசரிச்சு போவது உங்களுக்கு நல்லது .இன்று நீங்கள் எந்த ஒரு புதிய முயற்சியும் எடுத்தாலும் அது மதியத்திற்கு மேலாக இருக்க வேண்டும் ,ஏனென்றால் பகல் 12 மணிவரை உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பதிய முயற்சிகளை காலையில் கைவிட வேண்டும் .கடந்த சில நாட்களை இருந்த உங்கள் பிரச்சனைகள் படிப்படியாக குறையும் .இன்று பிற்பகல் வரை நீங்கள் வீட்டில் இருப்பதே நல்லது .
கடகம்
கடக ராசி நேயர்களே இன்று உங்கள் ராசிக்கு பகல் 12 மணிக்கு பின் சந்திராஷ்டமம் இருப்பதால் ,நீங்கள் நிம்மதியில்லை நிலையை காண்பீர்கள் .எதிலும் நிம்மதியில்லை தன்மை ஏற்படும் .உங்கள் குடும்பத்தில் சில குழப்பங்களும் ,பிரச்சனைகளும் ஏற்படும் .கைக்கு வரவேண்டிய தொகையானது கிடைப்பதில் தாமதமாகும் .இன்று நீங்கள் உங்கள் வீட்டில் வசிப்பதே நல்லதாகும் .
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் நிறைவேறும் .குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் மற்றும் சுப நிகழ்வுகளுக்கான செலவுகள் அதிகரிக்கும் ,ஆகையால் செலவுகளை கட்டுப்படுத்துதல் அவசியமாகும் .கணவன் மற்றும் மனைவி இடையேயான உறவுகள் அதிகமாகும் .பெரிய மனிதர்களல் உங்களுக்கு நன்மைகிட்ட வாய்ப்பு அதிகமாகும் .வியாபார ரீதியாக உள்ள சிலுக்கல்கள் மற்றும் அலைச்சல்கள் குறையும் .
கன்னி
கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பணஉதவிகள் கிடைக்கும் .
வங்கியிலிருந்து கடனானது கிடைக்கும் .குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது உங்களுக்கு நல்லதாகும் .வீண்செலவுகளை தவிர்த்து சிக்கனமுடன் இருத்தல் ,உங்களுக்கு பணப்பிரச்சனைகளில் இருந்து விடுபட இது ஒரு நல்ல மார்க்கமாகும்
துலாம்
துலாம் ராசி உடையவர்கள் நீங்கள் எந்த செயல் எடுத்தாலும் அதில் நிதானம் மிக முக்கியமாகும் .உங்கள் குடும்பத்தில் உள்ள ஒற்றுமை குறைய வாய்ப்புகள் அதிகமாகும் .வீண் செலவுகள் உங்கள் பிள்ளைகள் மூலமாக ஏற்படலாம் .உங்கள் உடன் இருப்பவர்களை நீங்கள் அனுசரித்து சென்றால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .
விருச்சிகம்
இன்று உங்கள் வீட்டில் சந்தோஷம் மற்றும் மகிழ்ச்சி அதிகரிக்கும் . உங்கள் வீட்டில் மன அமைதி இருக்கும் .திருமண உறவு மற்றும் பேச்சுவார்த்தையில் உள்ள தடைகள் விலகி நல்ல முன்னேற்றம் காணப்படும் .உங்களது பிள்ளைகள் உங்கள் குணமறிந்து செயல்படுவார்கள் .
தனுசு
தனுசு ராசி அன்பர்களே உங்களது முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை கொடுக்கும் .வீண் செலவுகளை குறைப்பது நல்லது .உங்கள் செலவுகள் நீங்கள் பணம் பெரும் முன்பே வரிசை கட்டி நிற்கும் .ஆதலால் நீங்கள் சிக்கனத்துடன் இருப்பதே நல்லது .இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களிடம் வீண் விவாதம் செய்யாமல் அனுசரித்து செல்வது நல்லது .
மகரம்
உங்கள் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் மற்றும் உங்கள் குடும்பத்தினருடன் இருந்த கருத்து வேறுபாடுகள் குறையும் .நிதி நிலைமை சீராக அமையும்.பணம் வரவு அதிகரிக்கும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .பிள்ளைகளை மார்கிஸ்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்து சேரும் .பொருளாதார ரீதியாக கொடுக்கல் மற்றும் வாங்கல் நல்ல முறையில் இருக்கும் .
கும்பம்
இன்று உங்களுக்கு பணத்தின் வருகையானது அதிகரிக்கும் உடன் அதற்கான செலவுகளும் அதிகரிக்கும் .வீண் செலவுகளை தவிர்ப்பது நல்லது .புதிய முதலீடுகளை தற்போது தவிர்ப்பது நல்லது .நீங்கள் பேசும் வார்த்தையில் கவனம் தேவை .நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிதானம் மிக அவசியம் .
மீனம்
மீனம் ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்து சேரும் .தொடர் செலவுகள் வந்து சேரும் .உடல் ஆரோக்கியமாகவும் ,மன அமைதியுடனும் இருப்பீர்கள் .