இன்றைய ராசி பலன்கள் : 27 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும்.இன்று நீங்கள் சுறு சுறுப்பாகவும் தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள் .பண வரவு அதிகமாக இருக்கும் .திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் .நண்பர்களால் அனுகூலம் உண்டாகும். வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த காரி யம் அனுகூலமாக முடியும்.தந்தை வழியில் எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வியாபாரத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. சிலருக்கு திடீர் செலவுகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளது .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .

மிதுனம்

புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக முடியும் .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.சகோதரர்களின் வழியில் ஆதரவும் ,அன்பும் கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

கடகம்

கடக ராசி நண்பர்களே எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .குடும்பத்தில் பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .வெளியூர் பயணத்தில் அதிக கவனம் தேவை .கடன் பிரச்சனைகள் தீரும் .புதிய முயற்சிகளைக் காலையிலேயே தொடங்குவது நல்லது.வியாபாரம் வழக்கம்போல் நடைபெறும்.

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையாகவும் ,நிதானமாகவும் இருத்தல் அவசியமாகும்.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .மற்றவர்களுடன் பேசும்போது வார்த்தைகளில் நிதானம் தேவை. தாயின் உடல்நலனில் அக்கறை காட்டவும்.உத்தியோகத்தில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம்.வீண் செலவுகளால் கடன் வாங்க நேரிடும். நீண்ட நாள் வியாதிகள் விலகும்.

கன்னி

இன்று சந்திராஷ்டமம் இருப்பதால் பேச்சில் கவனமாக இருத்தல் அவசியமாகும். குடும்பத்தில் தேவையில்லாத டென்ஷன்கள் ஏற்படும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.எந்த ஒரு செயலிலும் நிதானமாக செயல்படுவது நல்லது.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

துலாம்

உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .பிள்ளைகளால் மகிச்சியானது உண்டாகும் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.உறவினர்களால் சங்கடங்கள் ஏற்பட்டாலும் பாதிப்பு எதுவும் இருக்காது. வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் விலகும்.

விருச்சிகம்

புதிய முதலீடுகள் லாபத்தை கொடுக்கும் .குடும்பத்தில் உங்களுடைய மதிப்பு உயரும்.சிலருக்கு அவ்வப்போது மனதில் இனம் தெரியாத குழப்பம் ஏற்பட்டு நீங்கும். வியாபாரத்தில் பொறுமையைக் கடைப்பிடிப்பது அவசியம்.ஒரு சிலருக்கு எதிர்பார்த்த பணம் வந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படும்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரும் . கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் யோசனையை வாழ்க்கைத்துணை ஏற்றுக் கொள்வார்.வீண் பிரச்சனைகளையும் விவாதத்தையும் தவிர்த்தல் நல்லது .சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளுக்கும் வாய்ப்பு உண்டு.

மகரம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.காரிய அனுகூலம் உண்டாகும். உங்கள் முயற்சிகளுக்கு சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள்.உத்தியோகத்தில் பதவி உயர்வானது கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும்.

கும்பம்

இன்று துணிச்சலாகவும் ,மன தைரியத்துடனும் செயல்படுவீர்கள் . எடுத்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .சிலருக்கு உடல் ஆரோக்கி யத்தில் கவனம் தேவை. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.குடும்பத்தில் உள்ளவர்களின் அன்பும் ஆதரவும் கிடைக்கும் .

மீனம்

குடும்பத்தில் எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்படலாம்.உத்தியோகத்தில் இருப்பவர்களுடன் ஒரு சில கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம் . சிலருக்கு வெளியூரில் இருந்து எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு .பண வரவு அதிகமாக இருக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும் .

Next Post

ஏலக்காயின் மருத்துவக்குணங்களும் அவற்றின் பயன்களும் : ஓர் பார்வை !!

Fri Nov 27 , 2020
ஏலக்காய் பல மருத்துவ குணங்களை கொண்டுள்ளது .இது நம் உடலுக்கு பல வகைகளில் பயனளிக்கிறது .ஏலக்காயில் புரதம் ,இரும்பு ,பொட்டாசியம் ,சுண்ணாம்பு,பாஸ்பரஸ் ,வைட்டமின் ஏ,பி மற்றும் சி சத்துக்களையும் கொண்டுள்ளது . ஏலக்காய் வாசனை திரவியமாக மட்டும் இல்லாமல் ,பல மருத்துவ பலன்களை கொண்டுள்ளது . 1 .சளி ,இருமலுக்கு ஏலக்காய் ஒரு மிகச் சிறந்த தீர்வாகும் .குளிர்காலத்தில் பலரும் சளி ,இருமலால் அவதிப்படுவது வழக்கமாகும். இதற்கு ஏலக்காயை பால் […]
Yelakkai-cardamom
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய