இன்றைய ராசி பலன்கள் : 26 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமைவதோடு ,வெற்றியை தேடி தரும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .நீங்கள் எதிர்பார்த்த உதவியானது உறவினர்கள் மூலம் கிடைக்கும் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி லாபமானது அதிகரிக்கும் .

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .குடும்பத்தில் சிறு சிறு சங்கடங்கள் ஏற்பட்டாலும் இறுதியில் மகிழ்ச்சியே உண்டாகும் .பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் .விட்டுக்கொடுத்து செல்வது சுமுக உறவிற்கு வழி வகுக்கும் .வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும் .பணவரவு அதிகரிக்கும் ,நீங்கள் நினைத்த காரியம் கைக்கூடும் நாளாகும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .நீங்கள் எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள் .எதிர்பார்த்த பண உதவியானது தந்தை மூலம் கிடைக்கும் .
கணவன் – மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது .நண்பர்களின் மூலம் நல்ல செய்தியானது தேடி வரும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நிதானமும் ,கவனமும் தேவை .வீண் விவாதங்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் நன்கு யோசித்து செயல்படுதல் நல்லது ஆகும் .பண வரவு அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே இருக்கும் .

சிம்மம்

இன்று நீங்கள் சந்தோஷத்துடனும் ,சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் .எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும் .பழைய கடன்களை திருப்பி தருவீர்கள் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி நன்மையானது அதிகரிக்கும் .கணவன் -மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பண வரவு சந்தோஷத்தை தரும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது கிடைக்கும் .சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டு .கடன் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .பிள்ளைகள் உங்கள் பேச்சை ஏற்று நடப்பார்கள் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிப்பது ரெட்டிப்பு மகிழ்ச்சியை தரும் .

துலாம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்படுதல் நல்லது .மற்றவர்களிடம் அனுசரித்து நடப்பது மன அமைதியை தரும் .பண நெருக்கடியை சமாளிப்பதற்கு சிக்கனமுடன் செயல்படுதல் அவசியமாகும் .உறவினர்கள் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள் .வியாபாரமானது மந்தமாகவே செயல்படும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான பேச்சு வார்த்தைகள் சுமுகமாக முடியும் .வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருத்தல் நன்மை தரும் .நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .முக்கிய முடிவுகள் எடுக்க இது உகந்த நாளாக அமையும்

தனுசு

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் சாதிக்கும் நாளாகும் .கணவன் -மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும் .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி தருவீர்கள் .பெரியமனிதர்களின் அறிமுகம் கிடைக்கும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொதுமையுடன் செயல்படுதல் நல்லது .இன்று உங்களுக்கு வீண் அலைச்சலும் மன உளைச்சலும் ஏற்படும் .உறவினர்களுடன் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .பேச்சில் நிதானமும் கவனமும் அவசியமாகும் .வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .

கும்பம்

இன்று நீங்கள் மன மகிழ்ச்சியுடன் அனைத்து செயல்களிலும் ஈடுபடுவீர்கள் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் .திருமணம் மற்றும் சுப காரியங்கள் கைக்கூடும் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் அதிகம் .
மனதில் தன்னம்பிக்கை உணர்வு அதிகரிக்கும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .

மீனம்

இன்று உங்களுக்கு வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .சிலருக்கு எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கும் .வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பிள்ளைகளால் தேவையற்ற செலவுகள் ,சங்கடங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .பூர்விக சொத்துக்கள் வழியில் லாபமானது கிடைக்க வாய்ப்புகள் உள்ளது .வியாபார ரீதியில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 27 -10 -2020

Tue Oct 27 , 2020
மேஷம் இன்று உங்களுக்கு புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .எதிர்பார்க்காத நல்ல செய்தியானது தேடி வரும் .உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை.வியாபாரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் லாபமானது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் . ரிஷபம் ரிஷப ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடன் காண்பீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியும் ,மனமகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்களும் நடைபெறும் .சிலருக்கு […]
indraya-raasi-palangal-27-10-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய