இன்றைய ராசி பலன்கள் : 24 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும் .உறவினர்கள் மற்றும் நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .கணவன் மனைவி இடையே சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .பழைய கடன் பிரச்சனைகள் தீரும் .திருமணம் போன்ற சுப காரியங்கள் பேச ஏதுவானது நாளாக அமையும் .உங்கள் உடல் நலம் ஆரோக்கியமாக அமையும் .வியாபாரத்தில் முன்னேற்றம் இருக்கும் ,ரெட்டிப்பு லாபம் அடைவீர்கள் .

ரிஷபம்

இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாகும் .எந்தவொரு வேலையையும் துணிச்சலோடு செய்து முடிப்பீர்கள் அதில் வெற்றியும் காண்பீர்கள் .பிளாய்களால் மகிழ்ச்சி உண்டாகும் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .பேசும் வார்த்தைகளில் நிதானமும் ,கவனமும் இருத்தல் அவசியமாகும் .வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .

மிதுனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படும் .வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .வியாபாரத்தில் கணிசமான அணுகுமுறையே சிறந்தது .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .குடும்பத்தில் அனுசரித்து நடந்தால் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம் .

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் நினைத்த காரியம் அனுகூலமாக முடியும் .புதிய முயற்சிகளுக்கு உங்கள் குடும்பத்தின் ஆதரவு கிடைக்கும் .தாய் வழி உறவுகளால் உதவியானது கிடைக்கும் .எதிரிகளுடன் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி ,மன உறுதியுடன் செயல்படுவீர்கள் .திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் ,பணியாளர்கள் உற்சாகமாகவும் செயல்படுவார்கள்

சிம்மம்

இன்று உங்களுக்கு உற்சாகம் நிறைந்த நாளாகும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .வெளிவட்டாரத்தில் உங்களின் மதிப்பு உயரும் .உறவினர்கள் உங்களுக்கு முக்கியத்துவம் தருவார்கள் .வியாபாரத்தில் சில இடையூறுகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும் .நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .உங்களின் முயற்சிக்கு உங்கள் துணைவி பக்க பலமாக இருப்பார்கள் .உத்தியோகத்தில் சில பொறுப்புகள் தேடி வரும் .வியாபாரத்தில் அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் .

துலாம்

இன்று நீங்கள் மனதில் தன்னம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள் .பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம் .குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள் .தாய் வழி உறவுகளால் செலவுகள் ஏற்படலாம் .உங்களின் உழைப்பிற்கு ஏத்த ஊதியம் கிடைப்பதில் தாமதம் ஆகலாம் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் நீங்கி நெருக்கமானது அதிகரிக்கும் .

விருச்சிகம்

இன்று நீங்கள் மனதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் .இன்று பிள்ளைகளால் மன மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் தேடி வரும் .நீண்ட நாட்களாக எதிர்பார்த்த காரியமானது கைக்கூடும் .வீட்டில் உள்ள தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .நண்பர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள் .எதிர்பார்த்த பண வரவுகளும் ,திடீர் செலவுகளும் ஏற்படும் .வியாபாரத்தில் சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.

தனுசு

தனுசு ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பாராத பண உதவிகள் கிடைக்கும் .குடும்பத்தில் விட்டு கொடுத்துப்போவது நல்லது .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .பூர்விக சொத்துக்களால் லாபமானது கிடைக்க வாய்ப்புகள் உண்டு . உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .எதிர்பார்த்த காரியமானது கைக்கூட தாமதம் ஆகலாம் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

மகரம்

இன்று நீங்கள் எந்த செயலையும் செய்வதற்கு முன்பு திட்டமிடுதல் அவசியமாகும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தரும் .தேவையற்ற செலவுகளை தவிர்த்தல் நல்லது ,சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .சுப காரியங்கள் பற்றி பேச சிறந்த நாளாக அமையும் .உங்கள் வாழ்க்கை துணை உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்புகள் உண்டு .கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும் .பழைய கடன்கள் வசூலாகும் .சுப செலவுகள் தேடி வரும் .வீட்டில் இருப்பவர்களுடன் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ,பொறுமையுடன் நடப்பது அவசியமாகும் .வியாபாரத்தில் புதிய முதலீடு செய்வதற்கு முன்பு சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .

மீனம்

இன்று உங்களுக்கு சந்தோசம் நிறைந்த நாளாகும் .மனதில் உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் .நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .நண்பர்களின் சந்திப்பானது மகிழ்ச்சியை தரும் .புதிய பொருட்களை வாங்குவதற்கு ஆர்வம் காட்டுவீர்கள்.தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் ,சகோதரர்கள் உண்ணலிடம் உதவி கேட்டு வருவார்கள் .

Next Post

சூடு பிடிக்கும் பீகார் சட்டப்பேரவை தேர்தல் : தேர்தல் அறிக்கையை வெளியிட்டது ராஷ்டிரிய ஜனதா தளம் !!

Sat Oct 24 , 2020
பீகார் சட்டப்பேரவை தேர்தலில் சூடுபிடிக்கும் பிரச்சாரம் .பீகார் சட்டப்பேரவை களத்தில் இரு பெரும் கூட்டணிகள் மோதுகின்றன .லாலு பிரசாத் யாதவின் மகனான ,தேஜஸ்வி யாதவ் தலைமையில் ஒரு கூட்டணியும் ,நிதிஷ்குமார் தலைமையில் ஒரு கூட்டணியும் இடம்பெற்றிருக்கின்றன . பீகார் சட்டப்பேரவை தேர்தலானது மூன்று கட்டங்களாக வரும் 28 ஆம் தேதி தொடங்கி நவம்பர் 7 ஆம் தேதி வரை நடைபெறவிருக்கின்றன.இந்தத் தேர்தலில் மகாகட்பந்தன் எனும் பெயரில் ஒரு பெரிய மெகா […]
rashtriya-janatha-party-tejaas-yadav-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய