இன்றைய ராசி பலன்கள் : 23 -10 -2020

மேஷம்

இன்று நீங்கள் நினைத்த காரியம் அனைத்திலும் வெற்றி கிடைக்கும் .எதிர்பாராத செலவுகள் அதிகரிக்க கூடும் ,வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .வெளியூரிலிருந்து சுப செய்தியானது வரும் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .வியாபாரத்தில் பழைய நண்பர்கள் தேடி வருவார்கள் மற்றும் சக ஊழியர்களிடம் ஒற்றுமையானது உண்டாகும் .திருமணம் போன்ற சுப காரிய பேச்சுவார்க்த்தைகளை தொடங்கலாம் .

ரிஷபம்

ரிஷப ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் சில சங்கடங்கள் மற்றும் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .குடும்பத்தில் உறவினர்களால் சில குழப்பங்கள் ஏற்படலாம் ,ஆனால் அதனால் தீங்கு ஏதும் ஏற்படாது .பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படும் .பணப் புழக்கம் கணிசமாக இருக்கும் .தொழில் மற்றும் வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

மிதுனம்

இன்று நீங்கள் எந்த செயல் எடுத்தாலும் கவனமாக செயல்படுதல் அவசியம் .திடீர் செலவுகள் ஏற்படும்,அதே நேரத்தில் எதிர்பாராத பண வரவும் வரும் .உங்கள் வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியானது உண்டாகும் .நீண்ட நாட்களாக வராத பணம் வந்து சேரும் .இன்று உங்களுக்கு ௭.௦௦ மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்க இருப்பதால் பேச்சில் கவனம் தேவை . எதிலும் நிதானத்துடன் செயல்படுதல் வேண்டும் .

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று நீங்கள் உற்சாகத்துடனும் சுறுசுறுப்புடனும் காணப்படுவீர்கள் .புதிய முயற்சிகள் வெற்றியை தரும் .உறவினர்களின் மூலம் சுப செய்தி தேடி வரும் .எதிலும் வெற்றியை காண்பீர்கள் .நீண்ட நாட்களாக வராத பணம் கைக்கு வரும் .பழைய கடன்களை திருப்பி தருவீர்கள் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கி நன்மை உண்டாகும் .வியாபாரத்தில் கூடுதல் லபமானது ரெட்டிப்பு மகிழ்ச்சியயை தரும் .

சிம்மம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .சகோதரர்களின் மூலம் உதவியானது கிடைக்கும் .உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள் .வியாபாரம் மற்றும் தொழில் சம்பந்தமாக வெளியூர் செல்வீர்கள் .அலுவலகத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நனமை உண்டாகும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே உங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வீட்டில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்குமுன் பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடத்தல் அவசியமாகும் .
தாய் வழி உறவுகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும்.அடுத்தவர்களிடம் அனுசரணையாக நடப்பது நல்லது .சிக்கனமாக இருத்தல் பணப்பிரச்சனை நீக்குவதற்கு வழி வகுக்கும் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .

துலாம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .புதியவர்களின் அறிமுகமானது கிடைக்கும் .எதிர்பார்த்த பண வரவும் ,எதிர்பாராத செலவுகளும் வந்து சேரும் .கடன் பிரச்சனைகள் சுமுகமாக தீரும் .வியாபாரத்தில் சக வேலையாட்களுடன் அனுசரித்து நடப்பது நல்லது .உங்களின் முயற்சிக்கு உங்கள் துணைவி பக்கபலமாக இருப்பார்கள் .வியாபாரத்தில் எதிர்பார்த்த உதவியும் லாபமும் கிடைக்கும் .புதிய பொருட்களை வாங்குவீர்கள் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் சிறு தடங்கல் ஏற்பட்டாலும் அது வெற்றியில் முடியும் .நண்பர்களிடம் எதிர்பார்த்த பண உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே அன்பும் ,நெருக்கமும் அதிகரிக்கும் .நீங்கள் விட்டுக்கொடுத்து செல்வது உங்களுக்கு நன்மையை உண்டாக்கும்.வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .

தனுசு

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .குடும்பத்தில் உள்ளவர்களின் ஆலோசனைகளை ஏற்று நடப்பது நல்லது .இன்று உங்களுக்கு சுப செய்திகள் தேடி வரும் .வாழ்க்கைத் துணையால் மகிழ்ச்சி உண்டாகும்.திடிர் செலவுகளும்,எதிர்பார்த்த பண உதவியும் வரும் .வெளி வட்டாரத்தில் உங்கள் மதிப்பானது உயரும் .வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் ,வியாபாரத்தில் சில யுக்திகளை கையாள்வீர்கள்.ஒரு சிலருடன் ஏற்பட்ட மன கஷ்டங்கள் நீங்கி நன்மையானது கிட்டும் .

மகரம்

மஹரை ராசி நண்பர்களே இன்று நீங்கள் எந்த காரியத்திலும் திட்டமிட்டு செயல்படுதல் அவசியமாகும் .சிலருக்கு தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் .எதிர்பார்த்த காரியமானது கைகூடும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமானது ஏற்படும் .உடன் இருப்பவர்களின் ஒத்துழைப்பும் ,உதவியும் கிடைக்கும் .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்தபடியே அமையும் .எதிர்பார்த்த உதவி தடையின்றி கிடைக்கும் .

கும்பம்

இன்று நீங்கள் மன அமைதியுடன் செயல் படுவீர்கள் .நண்பர்களிடத்தில் சில மனக்கஷ்டங்கள் ஏற்பட்டாலும் ,பாதிப்பு ஏதும் ஏற்படாது .புதிய பொருட்களை வாங்குவதற்கு சேர்க்கையானது நடைபெறும் .உத்தியோகத்தில் புதிய பதவிகள் தேடி வரும். வியாபாரத்தில் வெளியூர் பயணங்களால் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.புதிய முதலீடு செய்வதற்கு உகந்த நாளாகும் .
வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்ததை விட கூடுதலாக இருக்கும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையுடனும் ,நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகள் பொறுப்பாக நடந்துகொள்வது மகிழ்ச்சி தரும்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும்.எதையும் சாதிக்கும் துணிச்சல் வரும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள் .வேலையாட்களின் ஒத்துழைப்பால் தொழில் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். சிக்கனமாக செயல்பட்டால் பணபற்றாக்குறையை சமாளிக்க முடியும்.

Next Post

அருப்புக்கோட்டை : அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி விழாவை முன்னிட்டு சிறப்பு வழிபாடு !!

Fri Oct 23 , 2020
அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு வியாழக்கிழமை இரவு சிறப்பு வழிபாடு நடைபெற்றது .அருப்புக்கோட்டை காந்தி நகரிலுள்ள ஈஷா யோகா மையக்கிளையில் எழுந்தருளியுள்ள அருள்மிகு லிங்கபைரவி தேவியின் திருஉருவப் படத்திற்கு மலர்மாலை மற்றும் வஸ்திரத்தால் அலங்காரங்கள் செய்யப்பட்டன . அருள்மிகு லிங்கபைரவி தேவிக்கு நவராத்திரி 6 ஆம் நாளை முன்னிட்டு 11 வகையான அபிஷேக பொருட்களைக்கொண்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது .குங்குமம் ,சந்தனம், வெண்ணெய், எலுமிச்சைப்பழம் […]
linga-bairavi-temple
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய