
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுதல் நல்லது .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமானது இருக்கும் .திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .பிள்ளைகளின் படிப்பில் கவனம் செலுத்துதல் வேண்டும் .வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும் .
ரிஷபம்
இன்று நீங்கள் எந்த செயலை செய்தாலும் அதில் கவனமாகவும் ,சிந்தித்து செயல்படுதலும் அவசியமாகும் . பணம் கொடுக்கல் வாங்கலில் அதிக கவனம் தேவை .சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் உண்டு. சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும்.மற்றவர்களுடன் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .திருமணம் மற்றும் குடும்ப நிகழ்ச்சிகளில் சந்தோஷமானது அதிகரிக்கும் .
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாகும் .மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும் .அரசாங்க வகையில் எதிர்பார்க்கும் காரியம் அனுகூலமாக முடியும்.உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் .கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது .வியாபாரத்தில் லாபமானது கூடுதலாக இருக்கும்.
கடகம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கும்.சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும்.உடல் நலம் நன்றாக இருக்கும் . சிலருக்கு உறவினர்கள் வழியில் ஆதாயமானது கிடைக்கும் .சகோதரர்கள் உங்கள் உதவியை நாடுவார்கள் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த காரியமானது முடிவதில் தாமதமாகும் .மனதில் ஒரு இனம் புரியாத சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும் .குடும்ப பொறுப்புகளுக்காக சற்று அலைச்சலும் ,பயணங்களும் இருக்கும் .தாய்மாமன் வழியில் சுபச்செய்தி வரும். அக்கம்பக்கத்தில் இருப் பவர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் அதனால் பாதிப்பு இருக்காது.
கன்னி
கணவன் மனைவி இடையே ஒரு சில மனக்கசப்புகள் ஏற்படும் என்பதால் விட்டுக்கொடுத்து நடப்பது அவசியமாகும் .இன்று தன்னம்பிக்கையுடன் செய்லபடும் நாளாகும் .நீண்ட நாள்களாக எதிர்பார்த்த நல்ல செய்தி கிடைக்கக்கூடும். வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்தபடி இருக்கும்.
துலாம்
இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .பண வரவு தாராளமாக இருக்கும் .குடும்பத்தில் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படலாம் .சகோதர வகையில் மகிழ்ச்சியுடன் ஆதாயமும் உண்டாகும். உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும்.. தந்தை வழி யில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வியாபாரத்தில் விற்பனையானது நன்றாக இருக்கும் .
விருச்சிகம்
இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும் .திருமண வாழ்வில் சந்தோசம்மனது அதிகரிக்கும்.புதியமுயற்சிகளை தவிர்த்தல் நல்லது .கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.வீண் விவாதங்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .உத்தியோகத்தில் கவனமாக இருந்தால் அவசியமாகும்.
தனுசு
புதிய முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் .காரியங்களில் அனுகூலமானது உண்டாகும்.எதிர்பார்த்த நல்ல செய்தி இன்று கிடைக்கும். கண வன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த பிணக்குகள் நீங்கும்.வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் ஏற்படும். உறவினர்கள் வகையில் எதிர்பார்த்த சுபச்செய்தி கிடைக்கும். வியாபாரம் வழக்கம் போல நடைபெறும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே இன்று சுறு சுறுப்பாகவும் உற்சாகத்துடனும் செயல்படுவீர்கள் .பிள்ளைகளால் நிம்மதியானது கிடைக்கும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமானது அதிகரிக்கும் .தேவையான பணம் இருப்பினும் தேவையற்ற செலவுகளும் ஏற்படுவதால், கையிருப்பு கரைவதுடன் சிலருக்குக் கடன் வாங்கவும் நேரிடும்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் .
கும்பம்
எதிர்பாராத செலவுகள் ஏற்படும் ,சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .குடும்பத்தில் உள்ளவர்களின் உடல் நலத்தில் அக்கறை காட்டுங்கள் .சகோதர வகையில் எதிர்பாராத செலவு ஏற்படும்.நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைக்கும். அரசாங்க வழியில் எதிர்பார்த்த காரியமானது முடிவதில் தாமதம் ஆகலாம் .
மீனம்
கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வீண் அலைச்சலைத் தவிர்ப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள் வகையில் சுபச்செலவுகள் ஏற்படும்.மற்றவர்களுடன் பேசும்போது நிதானமாக செயல்படுதல் நல்லது .எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருப்பது கூடுதல் மகிழ்ச்சி தரும்.