
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.கணவன் மனைவி இடையே ஏற்பட்டிருந்த மன வருத்தங்கள் நீங்கும் .உடல் ஆரோக்கியத் தில் கவனம் செலுத்தவும். வியாபாரத்தில் சக வியாபாரிகளால் அனுகூலம் உண்டாகும்.எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவியானது தேடி வரும் .வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்த படியே இருக்கும் .
ரிஷபம்
இன்று நீங்கள் வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது . உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையுடன் செயல்படுதல் நல்லது .உத்தியோகத்தில் கவனம் தேவை .புதிய முதலீடுகளை தவிர்த்தல் நல்லது .அவசியத் தேவை என் றாலும்கூட கடன் வாங்க வேண்டாம். வியாபாரத்தில் பணியாளர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது நல்லது. வீண் பேச்சுகளை தவிர்க்கவும் .
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும்.உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.கடன் பிரச்சனைகள் தீரும் .எதிர்பார்த்த பணம் கிடைக்கும் .வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள் .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்தபடியே அமையும் .
கடகம்
நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .நண்பர்கள் மூலம் பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.சகோதர வழியில் நன்மையானது உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .வியாபாரத்தில் திடீர் செலவுகளும், பணி யாளர்களால் வீண் பிரச்னைகளும் ஏற்படக்கூடும் என்பதால் கவனமாக இருத்தல் அவசியமாகும் .
சிம்மம்
சிம்ம ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் ஒரு சில சஞ்சலங்கள் ஏற்பட்டு நீங்கும் .உறவினர்களின் வழியில் ஒருசில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பொறுமையாக இருத்தல் அவசியமாகும் .பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும்.குடும்பத்தில் விட்டு கொடுத்து நடந்தால் வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .
கன்னி
கன்னி ராசி நண்பர்களே இன்று சிலருக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வீண் செலவுகளை தவிர்த்து சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையுடன் பேசுதல் நல்லது .நீண்ட நாட்களாக வராத பணம் விரைவில் வந்து சேரும் .வியாபாரத்தில் விற்பனையானது கணிசமாகவே நடைபெறும் .
துலாம்
துலாம் ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .திருமணம் போன்ற சுப காரியங்கள் கைக்கூடும் .குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை தவிர்த்தல் நல்லது .உடன் பிறந்தவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்தபடியே அமையும் .
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் சிக்கனமுடன் நடப்பது நல்லது .பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்படலாம் .கணவன் மனைவி இடையே சில சங்கடங்கள் ஏற்படலாம் ,விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்த்தல் நல்லது .வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும் .வியாபாரத்தில் வழக்கமான நிலையே ஏற்படும் .
தனுசு
இன்று உங்கள் குடும்பத்தில் மனமகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும். பூர்விக சொத்துக்கள் வழியில் லாபமானது உண்டாகும் .தேவையான பணம் கையில் இருந்தாலும் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.
மகரம்
மகர ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது .பணவரவும் அதற்கேற்ற செலவுகளும் அதிகரிக்கும் .வாழ்க்கைத்துணையால் மகிழ்ச்சி உண்டாகும். உங்களுடைய முயற்சிகளுக்கு குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனை யும் லாபமும் அதிகரிக்கும்.
கும்பம்
இன்று உங்களுக்கு சாதகமான நாளாக அமையும் ,எதிலும் வெற்றியை காண்பீர்கள் .திருமணம் போன்ற சுப காரிய நிகழ்ச்சிகளில் அனுகூலம் உண்டாகும் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருக்கும்.கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .
மீனம்
இன்று நீங்கள் பொறுமையுடனும் நிதானமாகவும் செயல்படுதல் நல்லது .குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாகும் .சகோதரர்களால் வீண் செலவுகள் ஏற்படக்கூடும். பிள்ளைகள் மூலம் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும். வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறும்.உறவினர்கள் மூலம் சுப செய்திகள் தேடி வரும் .உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் மூலம் நன்மையானது உண்டாகும் .