இன்றைய ராசி பலன்கள் : 14 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு நல்லநாளாக அமையும் .இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் நல்லது ஆகும் .உங்கள் பிள்ளைகளால் மகிழ்ச்சி ஆனது உண்டாகும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தல் நல்லது ஆகும் . சிலருக்கு பணவரவானது அதிகரிக்கும் .சுப காரியங்கள் மற்றும் திருமணசம்பந்தம்மான பேச்சுவார்த்தைகள் ஏற்படும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் பலர் உங்களிடம் ஆலோசனைகளை கேட்டு வருவார்கள் .

ரிஷபம்

இன்றைய நாள் உங்களுக்கு சுபநாளாக அமையும் .உடன்பிறந்தவர்களின் மூலம் நன்மை உண்டாகும் .உங்கள் துணைவியின் உதவியால் பல காரியங்கள் ஈடேறும் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .எதிர்பாராத பணவரவு ஆனது உங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சியை தரும்.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .பொறுமையை கடைபிடித்தல் நல்லதாகும் .வியாபாரத்தில் உள்ள சில சூட்சமங்களை அறிவீர்கள் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள் .உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கும் .உங்கள் முயற்சிக்கான வெற்றி கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல லாபமும் ,புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகமும் கிட்டும் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சனைகள் நீங்கி நெருக்கம் அதிகமாகும் .தந்தை வழியில் ஒரு சில காரியங்கள் கைகூடும் .

கடகம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியை தேடித் தரும்.குடும்பத்தில் மகிழ்ச்சியானது பூத்து குலுங்கும் . பெரிய மனிதர்களின் நட்பானது லாபத்தை கொடுக்கும் வகையில் இருக்கும் .எதிர்பாராத பணவரவுகளும் ,புதிய பொருட்கள் வாங்குவதற்கு ஏதுவான நாளாகவும் அமையும் .உங்கள் உடலில் முன்னேற்றம் ஏற்படும் .வியாபாரத்தில் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .வீண் விவாதங்களை தவிர்த்தல் நல்லது ஆகும் .

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சிறு குழப்பங்கள் ஏற்பட்டாலும் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டால் நன்மையே உண்டாகும் .நிதி நிலைமை ஆனது கணிசமாகவே இருக்கும் .நீண்ட நாட்களாக நீங்கள் எதிர்பார்த்த நல்ல செய்தியானது வந்து சேரும் .குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .அலுவலகங்களில் உயர் அதிகாரிகளால் நன்மை கிடைக்க வாய்ப்புகள் அதிகம் .
ஒருவரை ஒருவர் அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் .

கன்னி

இன்று உங்களுக்கு எதிர்பாராத தீடிர் செலவுகள் வரலாம் ,அது உங்கள் மனதை சங்கடத்திற்கு உள்ளாக்கலாம்.குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து நடப்பது நல்லது ஆகும் ,உடன் பிறந்தவர்களுடன் பேசும்போது கவனம் தேவை இல்லையென்றால் சில மன கசப்புகள் ஏற்படலாம் .உங்கள் துணைவியுடன் இருந்த பிரச்சனைகள் நீங்கி அன்பு அதிகரிக்கும் .இன்றைய நாள் கவனமுடன் செயல்படவேண்டிய நாளாகும் .

துலாம்

நீங்கள் இன்று தொடங்கும் காரியத்தில் வெற்றி பெறுவீர்கள் ,குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு ஏற்ற நாளாகும் .பூர்விக சொத்துக்கள் மூலம் லபமானது கிடைக்கும் .தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .உறவினர்களின் மூலம் நல்ல செய்தி தேடி வரும் .தொழில் மற்றும் வியாபாரரீதியாக லாபமானது எதிர்பார்த்ததை விட அதிகமாகும் .பெருந்தன்மையுடன் செயல்படுதல் நல்லது ஆகும் .நண்பர்கள் மூலம் உதவிகள் தேடி வரும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்றைய நாள் உற்சாகமான நாளாக அமையும் .குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் .மனதிற்கு இனிமை தரக்கூடிய செய்திகள் தேடி வரும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன் யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் லபமானது கணிசமாகவே இருக்கும் .சிந்தனையுடன் செயல்படுதல் வெற்றியை தேடி வரும் .புதிய பொருட்கள் மற்றும் ஆபரணங்களை வாங்குவதற்கு உகந்த நாளாகும் .

தனுசு

இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .சிக்கனத்துடன் செயல்படுதல் நல்லது ஆகும் .தேவையான பணம் கையிருப்பு இருந்தாலும் ,செலவுகள் அதிகமாகும் ,சிலருக்கு கடன் வாங்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படலாம் .நிதானமாக பேசுதல் நல்லது ஆகும் .பிள்ளைகளின் போக்கில் நஅல்ல மாற்றங்கள் ஏற்படும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருப்பது அவசியமாகும் .உடல் ஆரோக்கியத்தில் பாதிப்புகள் ஏற்படலாம் .வீண் பயணத்தை தவிர்த்தல் நல்லது ஆகும் .எதிர்பாராத செலவுகள் ஏற்படலாம் .குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படலாம் கவனமுடன் நடப்பது நல்லது .வியாபாரம் சுமாராகத்தான் இருக்கும் .

கும்பம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், ஒற்றுமையும் உண்டாகும்.உங்கள் நண்பர்கள் வழியில் உதவிகள் கிட்டும்.தந்தையுடன் சில மன கஷ்டங்கள் வந்தாலும் தன்னம்பிக்கையுடன் சமாளித்து விடுவீர்கள் .திருமணம் தொடர்பான நல்ல செய்தி தேடி வரும் ,நல்ல வரன்களும் அமையும் .வியாபாரம் கணிசமாகவே நடைபெறும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சந்தோசம் நிறைந்த நாளாக அமையும் .கணவன் மனைவி இடையே நெருக்கமும் அன்பும் அதிகமாகும் .உறவினர்களால் ஆதாயம் உண்டாகும் .பிள்ளைகளால் சுப செய்திகள் தேடி வரும் .புதிய முயற்சிகளை எடுக்கும்போது நல்ல ஆலோசனைகளை பெறுதல் நல்லது ஆகும் .உங்களின் துணைவி வழியால் ஆதாயம் கிடைக்கும் .வியாபாரம் வழக்கம் போல் நடைபெறும் .முருகப்பெருமானை வழிபடுதல் நன்மையை தரும் .

Next Post

விரைவில் அறிமுகமாக இருக்கும் ஆப்பிள் ஐபோன் (iphone) -OLED வசதியுடன் 4 மாடல்களில் வெளியான ஐபோன்கள் !!

Wed Oct 14 , 2020
ஆப்பிள் நிறுவனமானது இந்திய சந்தைகளில் அக்டோபர் 30 முதல் ஐபோன்கள் கிடைக்கும் என அறிவித்துள்ளது . ஐபோன் 12 சீரிஸ் மாடல்கள் :(iphone models) ஐபோன் மாடல்களானது ஐபோன் 12 சீரிஸ் வகையில் ஆப்பிள் நிறுவனமானது 4 வகையான மடல்களை வெளியிட்டுள்ளது .1 .ஐபோன் 12(iphone 12)2.ஐபோன் 12 மேக்ஸ்(iphone 12 max)3.ஐபோன் 12 ப்ரோ(iphone 12 pro)4.ஐபோன் 12 ப்ரோ மேக்ஸ்(iphone 12 max) ஐபோன் 12 சீரிஸ் […]
iphone-12-new-model
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய