இன்றைய ராசி பலன்கள் : 13 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் மகிழ்ச்சியாகவும் ,சுறுசுறுப்புடனும் காண்பீர்கள்.குடும்பத்தில் திருமணம் மற்றும் சுப காரியங்கள் நடைபெறும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் ஆதாயம் கிடைக்கும்.புதிய முயற்ச்கிகள் பலன் அளிக்கும் .எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்..வியாபாரத்தில் விற்பனையும் , லாபமும் கணிசமாகவே இருக்கும் .

ரிஷபம்

இன்று நீங்கள் நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள் .பல வகைகளில் நீங்கள் எடுத்த காரியமானது கைக்கூடும்.உறவினர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்கும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. .வாழ்க்கை துணையின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .தொழில் ரீதியா ஏற்ப ட்ட சிலசங்கடங்கள் தீர்ந்து நன்மையானது உண்டாகும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிர்பார்த்த உதவியானது நண்பர்கள் மூலம் கிடைக்க வாய்ப்புகள் உண்டு.புதிய முயற்சிகளை மேற்கொள்ளும்போது சிந்தித்து செயல்படுதல் நல்லது .குடும்பத்தில் விட்டுக்கொடுப்பதன் மூலம் தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வீட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும்.வியாபாரத்தில் சில இடையூறுகளை சமாளிக்க வேண்டியிருக்கும் .

கடகம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும் .உடல் நலம் நன்றாக இருக்கும் .புதிய முயற்சிகள் இன்று உங்களுக்கு சாதகமாக முடியும் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுடன் திடீர் செலவுகளும் ஏற்படக்கூடும். உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

சிம்மம்

சிம்ம ராசி நன்பர்களே இன்று நீங்கள் பொறுமையுடன் ,சிந்தித்து செயல்படுதல் அவசியமாகும் .குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது .கணவன் – மனைவிக்கிடையே மனஸ்தாபம் ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ஒருவரையொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வீண் செலவுகளால் சிலருக்கு கடன் வாங்க நேரிடும் .

கன்னி

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றிகரமாக அமையும் .குடும்பத்தில் பொருளாதார நிலை சீராக அமையும் .சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முக்கிய முடிவு எடுப்பதற்கு உகந்த நாள். சுபநிகழ்ச்சிகளுக்கான பேச்சுவார்த்தை சாதகமாக முடியும்.எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் பெரிய மனிதர்களின் அறிமுகமானது கிடைக்கும் .
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சியை தரும்.

துலாம்

துலாம் ராசி நேயர்களே இன்று உங்களுக்கு வீண் பிரச்சனைகளும் ,வீண் செலவுகளும் அதிகரிக்கும்.சிக்கனத்தை கடைப்பிடித்தல் நல்லது.முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன் பலமுறை யோசித்தல் நல்லது .வாழ்க்கைத்துணைவழி உறவினர்களால் ஆதாயம் உண்டாகும்.கொடுத்த கடன் விரைவில் வசூலாகும் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் மகிழ்ச்சியானது அதிகரிக்கும்.பிள்ளைகளால் மனதிற்கு மகிழ்ச்சி கிடைக்கும்.உறவினர்களிடம் இருந்த சில பிரச்சனைகள் நீங்கும் புதிய முயற்சிகள் சாதகமாக முடியும். இன்று குடும்பம் தொடர்பான பிரச்னையை பேசி முடிவுக்குக் கொண்டுவர உகந்த நாளாக அமையும் வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே இருக்கும்.

தனுசு

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் ,தைரியத்துடனும் செயல்படுவீர்கள் .குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாகக் கிடைப்பதால் மகிழ்ச்சியோடு இருப்பீர்கள்.வியாபாரத்தில் ஒரு சில புதிய உக்திகளளை கையாளுவீர்கள் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்களின் உறவியினர்களின் வருகையால் சந்தோஷமானது அதிகரிக்கும் .ஆபரணங்கள் மட்டும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவார்கள் .அரசாங்கக் காரியங்கள் இழுபறியாகும். அதிகாரிகள் கண்டிப்பாக நடந்து கொள்வார்கள்.குடும்பத்தில் உள்ளவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமையானது அதிகரிக்கும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் உள்ளதால் நீங்கள் எதிலும் பொறுமையாகவும் ,நிதானமாகவும் செயல்படுதல் நல்லது .குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதை தவிர்த்துவிடுவது மிகவும் அவசியம்.குடும்பத்தில் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .மற்றவர்களால் மறைமுகத் தொல்லைகளும், விமர்சனங்களும் ஏற்படக்கூடும். வியாபாரத்தில் விற்பனையானது கணிசமாகவே நடைபெறும் .

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் நிதானமாக செயல்படுதல் நல்லது .சிலருக்கு வீண் செலவுகள் ஏற்படக்கூடும்.உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த காரியம் இழுபறியானாலும் முடிந்துவிடும்.பெரிய முதலீடுகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது .அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் சுமுகமாகப் பழகுவார்கள். வியா பாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

Next Post

இந்தியா : நவீன ஏவுகணை சோதனை வெற்றி - பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் !!

Fri Nov 13 , 2020
ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நவீன ஏவுகணை சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டது . தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை ,அதன் இலக்கை அழித்து வெற்றிகரமாக செயல்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது . நவீன ஏவுகணை சோதனை ஆனது 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட Q.R.S.A.M ஏவுகணை ஆனது வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் […]
india-satelitte-QRSAM-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய