இன்றைய ராசி பலன்கள் – 12 -10 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் நாளாகும் .நீங்கள் இன்று எடுக்கும் முயற்சிகளில் நிதானமும், நன்கு யோசித்தும் செயல்பட வேண்டும் .எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் .இன்று உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்து போவது நல்லதாகும் , ஏனென்றால் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம். வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் ,வியாபாரத்தில் சக ஊழியர்களை அனுசரித்தல் நல்லது .எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூட சில தாமதம் ஆகலாம் .

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றியும் ,ஈடுபடும் செயல்களில் மன மகிழ்ச்சியோடு செயல்படுவீர்கள் .வீட்டில் உள்ளவர்களிடம் ஏற்பட்ட மன கஷ்டங்கள் நீங்கி சுமுகமான நிலையே ஏற்படும் .பூர்விக சொத்துக்கள் வழியில் லாபமானது கிடைக்கும் .வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபமும் மற்றும் வியாபாரத்தில் சில நுணுக்கங்களும் கற்றுக் கொள்வீர்கள்.கணவன் மனைவி இடையே நெருக்கமும் ,அன்பும் அதிகரிக்கும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் சந்தோசம் ஏற்படும் ,வீட்டில் உள்ள பிரச்சனைகள் நீங்கும் ,வீட்டில் உள்ள அனைத்து தேவைகளையும் நிறைவேற்றுவீர்கள்.பண புழக்கம் அதிகமாகும் .மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையை கடைபிடித்தல் நல்லது ஆகும் .உடலில் ஆரோக்கியம் உண்டாகும் .எடுக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .

கடகம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியும் ,அமைதியும் உண்டாகும் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .நண்பர்களிடம் இருந்த மனக்கசப்புகள் நீங்கும் .வியாபாரத்தில் சுமுகமான நிலையே ஏற்படும் .வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படக்கூடும் என்பதால் ,உணவு விஷயத்தில் மிகவும் அவசியம் தேவை .வியாபாரத்தில் சக ஊழியர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் .அவசர முடிவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .

சிம்மம்

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக அமையும் .உறவினர்களிடம் ஒரு சில பிரச்சனைகள் ஏற்படும் என்பதால் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் .பழைய கடன் பிரச்சனைகளை தீர்க்க முயற்ச்சி எடுப்பீர்கள் .வெளி வட்டாரங்களில் நட்பு உண்டாகும் . வியாபாரத்தில் விற்பனையானது கணிசமாகவே நடைபெறும் .அலுவலகங்களில் சக ஊழியர்களால் பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் .குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும் .உறவினர்களின் வழியில் உதவியானது கிடைக்கும் . வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்த படியே கிடைக்கும் .எடுத்த காரியம் வெற்றிகரமாக அமையும் .புதிய பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள்

துலாம்

இன்று உங்கள் உடன்பிறந்தவர்களால் உங்களுக்கு உதவியானது கிடைக்கும் .இன்று மனதில் தன்னம்பிக்கையுடனும் ,முக்கிய முடிவுகளை துணிச்சலுடனும் எடுப்பீர்கள் .நண்பர்கள் வழியில் மகிழ்ச்சியானது கிடைக்கும் .பிள்ளைகள் கேட்டதை மகிழ்ச்சியுடன் வாங்கி தருவீர்கள் . பெண்களுக்கு பணிச்சுமையானது குறையும் ,உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும் .வியாபாரத்தில் பொறுமையானது அவசியமாகும் ,சக ஊழியர்களுடன் பிரச்சனைகள் ஏற்படலாம் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ,இல்லையென்றால் கடன் பிரச்சனை அதிகரிக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சி உண்டாகும் . சகோதரர்களிடம் சில மன கஷ்டங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் மந்தமான நிலையே ஏற்படும் .உங்கள் உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள் .கணவன் மனை இடையே கருத்துக்கு வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும்

தனுசு

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் பொறுமையாகவும் ,நிதானமாகவும் இருத்தல் அவசியமாகும் .இன்று நீங்கள் சிக்கலான மற்றும் சாவல்களான செயல்களை கையில் எடுப்பதை தவிர்த்தல் நல்லது ஆகும் .வீண் வாக்குவாதங்களை தவிர்த்தல் நல்லது ஆகும் ,தேவையற்ற செலவுகள் ஏற்படலாம் .வீட்டில் உள்ள பெரியவர்களிடம் அனுசரித்து போவது நல்லது ஆகும் .வியாபாரத்தில் பல எதிர்ப்புகள் வந்தாலும் பொறுமையுடன் இருத்தல் அவசியமாகும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று நீங்கள் புதிய முயற்சிகளை எடுத்து வெல்வீர்கள் .நீங்கள் செய்யும் செயல்களில் முழு ஈடுபாடுடன் இருப்பீர்கள் .குடும்பத்தில் அமைதி மற்றும் சந்தோசம் நிகழும் .சில எதிர்பாராத பண வரவுகள் அதிகரிக்கும் .உங்கள் துணைவி வழியில் உதவிகள் மற்றும் பண வரவுகள் வர வாய்ப்புகள் அதிகம் .வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவானது கிட்டும் .

கும்பம்

இன்று உங்களுக்கு பண வரவு ஆனது அதிகரிக்க கூடும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .வியாபாரத்தில் லாபமானது ரெட்டிப்பாக அதிகரிக்க கூடும் .உயர்பதவியில் உள்ளவர்களின் அறிமுகமானது கிடைக்கும் .பிறருக்கு கொடுத்த கடன்கள் திரும்ப கிடைக்க கூடும் .வியாபாரத்தில் உடன் இருந்தவர்களின் கருத்துக்கு வேறுபாடுகள் நீங்கி நனமை உண்டாகும் .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று நீங்கள் புது முயற்சிகளை மேற்கொள்வீர்கள் .இன்று உங்களுக்கு சகிப்புத்தன்மையும் ,பொறுமையும் அதிகம் தேவைப்படும் .புதிய முயற்சியை தவிர்ப்பீர்கள் .சிலருக்கு எதிர்பாராத செலவுகள் ஏற்பட்டாலும் கையிருப்பு தேவையான பணம் இருப்பதால் சமாளித்து விடுவீர்கள் .நீங்கள் பொறுப்புதான் செயல்பட்டால் வியாபாரத்தில் ஏற்படும் இழப்புகளை தவிர்க்கமுடியும் .

Next Post

பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுடன் -குஷ்பு சந்திப்பு : காங்கிரசு கட்சியில் இருந்து விலகிய நிலையில் ...பாஜக வில் இணைந்தார் ...

Mon Oct 12 , 2020
பாஜக வின் தேசிய பொது செயலாளர் சி.டி.ரவி முன்னிலையில் குஷ்பூ பாஜக வில் இணைந்தார் .குஷ்பூ உடன் தமிழக பாஜக தலைவர் எல் .முருகனும் உடன் இருந்தார் . டெல்லி யில் பாஜக தேசிய தலைவர் ஜே .பி நட்டாவுடன் குஷ்பு நேரில் சந்தித்து தன்னை பாஜக வில் சற்று நேரத்தில் இணைவதாக கூறியிருக்கிறார் . இதற்கு முன் குஷ்பு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார் […]
kushboo-with-BJP
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய