இன்றைய ராசி பலன்கள் : 11 -12 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் .எடுத்த காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .உறவினர்கள் வகையில் குடும்பத்தில் மகிழ்ச்சியுடன் செலவுகளும் ஏற்படும்.சிலருக்கு பண வரவு தாராளமாக இருக்கும் .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .மற்றவர்களிடம் வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் சில இடையூறுகள் ஏற்படலாம் .

ரிஷபம்

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம் .திருமணம் போன்ற சுப காரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் .தந்தைவழியில் தேவையற்ற செலவுகள் ஏற்படக்கூடும். உறவினர்கள் மூலம் குடும்பத்தில் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும்.மற்றவர்களிடம் பொறுமையை கடைப்பிடித்தல் அவசியமாகும் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

மிதுனம்

கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடு நீங்கி அந்நியோன்யம் அதிகரிக்கும்.பிள்ளைகளால் ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் .குடும்பத்தில் அமைதியும் ஒற்றுமையும் அதிகரிக்கும் .எதிர்பாராத வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .உத்தியோகத்தில் ஒரு சில மாற்றங்கள் ஏற்படலாம் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

கடகம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .உத்தியோகத்தில் உடன் இருப்பவர்களை அனுசரித்து நடப்பது நல்லது.தொழில் ரீதியாக மேற்கொள்ளும் முயற்சிகள் வெற்றியை தரும் .புதிய முயற்சிகளில் ஈடுபட உகந்த நாளாக அமையும் .மனதில் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வியாபாரத்தில் லாபம் கூடுதலாகக் கிடைப்பது மகிழ்ச்சி தரும்.

சிம்மம்

நீங்கள் எடுக்கும் காரியங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும் .நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தருவதாக இருக்கும்.கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும் .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால் பேசும்போது பொறுமை அவசியம்.பிள்ளைகளின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .உறவினர்களுடன் இருந்த மன கசப்புகள் நீங்கும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .

கன்னி

இன்று நீங்கள் எதிலும் சிந்தித்து செயல்படுதல் நல்லது .கணவன் – மனைவிக்கிடையே சிறு சிறு பிரச்னை ஏற்படக்கூடும் என்பதால் பொறுமை அவசியம்.குடும்பத்தில் சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும் .எதிர்பாராத உதவிகள் கிடைப்பதில் தாமதமாகும் .உறவினர்கள் உங்கள் தேவை அறிந்து உதவுவார்கள் .சுப கரிய நிகழ்ச்சிகளில் சற்று பின்னடைவு ஏற்படலாம் .வியாபாரத்தில் புதிய யுக்திகளை மேற்கொள்வது லாபத்திற்கு வழி வகுக்கும் .

துலாம்

இன்று நீங்கள் உற்சாகமாகவும் ,சுறுசுறுப்பாகவும் செயல்படுவீர்கள் .நீங்கள் நினைத்த காரியத்தை வெற்றியுடன் செய்து முடிப்பீர்கள் .சகோதர வகையில் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.பூர்விக சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கி நன்மையானது உண்டாகும் .குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் எதிலும் சிக்கனமாக செயல்படுதல் நல்லது .வீண் செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கு உகந்த நாளாக அமையும் .உத்தியோகத்தில் அனுசரித்து நடப்பது நல்லது .சிலருக்கு எதிர்பாராத செலவுகளுக்கு வாய்ப்பு உண்டு. நண்பர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .வியாபாரம் சிறப்பாக அமையும் .

தனுசு

இன்று சிலருக்கு திடீர் பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்த்தல் நல்லது .பிள்ளைகளின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர்கள்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.புதியவர்களின் நடப்பு மகிழ்ச்சியை தரும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்ததை விடவும் கூடுதலாக இருக் கும்.

மகரம்

நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை ஈட்டித்தரும் .நண்பர்களின் ஆலோசனை நன்மையில் முடியும் .பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்னைகள் நீங்கும்.உடன் பிறந்தவர்களின் ஆதரவானது கிடைக்கும் .எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு நீங்கும்.வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று உங்கள் உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில தொய்வுகள் ஏற்படலாம் .மனதில் ஓரு சில குழப்பங்கள் வந்து விலகும் .கணவன் – மனைவிக்கிடையே வீண்விவாதங்கள் ஏற்படக்கூடும் என்பதால், பொறுமையைக் கடைப்பிடிப்பது நல்லது.கடன் பிரச்சனைகள் விரைவில் தீரும் .வியாபாரம் சற்று மந்தமாகவே நடைபெறும் .

மீனம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் நீங்கள் எதிலும் பொறுமையை கடைபிடித்தால் நல்லது .மற்றவர்களிடம் வீண் விவாதத்தையும் ,பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது.கணவன் மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .எதிர்பார்த்த இடத்தில எதிர்பார்த்த உதவியானது கிடைக்க தாமதம் ஆகும் .வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

Next Post

டிசம்பர் 25 ,ஓடிடியில் வெளியாகும் ஒரு பக்க கதை : டீசர் வெளியீடு !!

Sat Dec 12 , 2020
ஒரு பக்க கதை திரைப்படமானது ஓடிடியில் வெளியாகவுள்ளது. ஒரு பக்க கதை திரைப்படத்தின் இயக்குனர் பாலாஜி தரணிதரன் ஆவர் .இவர் நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம் என்ற திரைப்படத்தின் இயக்குனர் ஆவர் . ஒரு பக்க கதை திரைப்படமானது 2015 ஆம் ஆண்டு வெளியிடப்படுவதாக இருந்த நிலையில் ஒரு சில காரணங்களுக்காக தாமதமானது. தற்போது இந்த திரைப்படம் ஓடிடி யில் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் நடிகர் ஜெயராமனின் மகனான […]
oru-pakka-kathai-teaser-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய