இன்றைய ராசி பலன்கள் : 11 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் ஒரு சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும்.பிள்ளைகளால் வீண் செலவுகள் ஏற்படலாம்.உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .மற்றவர்களிடம் பேசும்போது நிதானமாகவும் ,கவனமாகவும் பேசுதல் அவசியமாகும் .புதிய யுக்திகளை கையாண்டால் வியாபாரத்தில் லாபத்தை காணலாம் .முக்கிய முடிவுகள் எடுப்பதை தவிர்க்க வேண்டும் .

ரிஷபம்

இன்று உங்கள் உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் .சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.மற்றவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்வது அவசியமாகும் .உத்தியோகத்தில் பணியாளர்கள் ஒத்துழைப்பு தருவார்கள் .வியாபாரத்தில் விற்பனையானது கணிசமாகவே நடைபெறும் .ஒரு சில நேரங்களில் விரைவில் முடிய வேண்டிய காரியங்கள் தாமதம் ஆகலாம் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடனும் ,உற்சாகத்துடனும் காண்பீர்கள் .எடுக்கும் முயற்சிகளில் வெற்றியானது கிடைக்கும்.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாள். பிள்ளைகளின் பிடிவாதப் போக்கு மாறும். சிலருக்கு வேலை விஷயமாக வெளியில் செல்ல நேரிடும்.வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள் ,வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

கடகம்

இன்று உங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் மற்றும் மகிழ்ச்சியும் உண்டாகும் .சகோதரர்கள் மூலம் உதவியானது கிடைக்கும் .பேச்சில் நிதானமும் கவனமும் தேவை .அரசாங்க தொடர்பான காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .நண்பர்கள் மூலம் உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து நடப்பட்டது நல்லது .பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று உங்கள் உறவினர்களின் வருகையால் மகிழ்ச்சியானது உண்டாகும் .
எதிர்பாராத செலவுகள் ஏற்படும் என்பதால் ,வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வாழ்க்கை துணையால் மகிழ்ச்சியானது உண்டாகும் .சிலருக்கு வேலை சம்பந்தமான புதிய வாய்ப்புகள் தேடி வரலாம் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். தொடங்கும் காரியம் அனுகூலமாக முடியும்.குடும்பத்தில் பொருளாதார ரீதியாக சில நெருக்கடிகள் வரலாம் .உத்தியோகத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே இருக்கும் .

துலாம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றியானது கிடைக்கும் .குடும்பத்தில் உள்ளவர்களுடன் ஒற்றுமையானது அதிகரிக்கும் .நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள் .சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.கொடுத்த கடன்கள் விரைவில் வசூலாகும் .எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று உற்சாகத்தோடும் ,புத்துணர்ச்சியோடும் காண்பீர்கள் .உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புகள் உள்ளது .தந்தையிடம் எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும். குடும்பம் தொடர்பான முக்கிய முடிவு எடுப்பதற்கு நல்ல நாளாக அமையும் . சகோதரர்களால் ஆதாயம் உண்டாகும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும் .

தனுசு

இன்று பொறுமையாகவும் ,சிக்கனத்துடனும் செயல்படுதல் நல்லது .தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் நீங்கி நன்மையானது உண்டாகும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .சிக்கனமுடன் செயல்பட்டால் கடன்களை தீர்க்கலாம் .தாய்வழி உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். சிலருக்கு புதிய நண்பர்களின் அறிமுகம் ஏற்படும்.

மகரம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் பொறுமையாகவும்,நிதானமாகவும் செயல்படுதல் நல்லது .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்படலாம் .வீண் விவாதங்களையும் ,பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .உறவினர்களால் அலைச்சலும் செலவுகளும் ஏற்படும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே குடும்பத்தில் சுப செலவுகள் ஏற்படும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் .எதிர்பார்த்த பணம் கைக்குக் கிடைக்கும். வீட்டில் உள்ளவர்கள் உங்கள் ஆலோசனையைக் கேட்டுச் செயல்படுவார்கள்.புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள் .உங்கள் ராசிக்கு பிற்பகலுக்கு மேல் சந்திராஷ்டமம் இருப்பதால் கவனம் தேவை .

மீனம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும் .மனதில் மகிச்சியானது உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும். சகோதர வகையில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடிவதுடன் அவர்கள் மூலம் பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சொத்து மற்றும் வழக்கு சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் காணப்படும் .கடன் பிரச்சனைகள் தீரும் .

Next Post

RITES - 2020 ஆம் ஆண்டிற்கான காலிப்பணியிடங்கள் :ரைட்ஸ் நிறுவனத்தின் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிப்பு !!

Wed Nov 11 , 2020
ரைட்ஸ் (RITES) நிறுவனமானது 2020 -2021 ஆண்டிற்கான காலிப்பணியிடங்களை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .2020 ஆண்டிற்கான ,தமிழ்நாடு முழுவதும் உள்ள 250 காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து ரைட்ஸ் நிறுவனம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது . இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க https://www.rites.com/ என்ற ரைட்ஸின் அதிகார பூர்வ இணையத்தளத்தை அணுகவும்.ரைட்ஸ்(RITES) நிறுவனத்தில் பல்வேறு பணிகளுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது . காலிப்பணியிடங்களுக்கான முழு விவரங்கள் கேழே கொடுக்கப்பட்டுள்ளன ,மேலும் விவரங்களுக்கு RITES இன் […]
RITES-recruitment-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய