இன்றைய ராசி பலன்கள் : 10 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் துணிச்சலாகவும்,தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையை கடைப்பிடித்தல் நல்லது.உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

ரிஷபம்

இன்று உங்களுக்கு மன நிறைவு தரும் நாளாக அமையும் .எதிர்பாராத பண வரவுகளும் ,வீண் செலவுகளும் வந்து சேரும் .கணவன் மனைவி இடையே சந்தோஷமானது அதிகரிக்கும் .மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் கவனமும் ,நிதானம் தேவை.வியாபாரத்தில் சில நெருக்கடிகளை சமாளிக்க வேண்டியிருக்கும் .புதிய முயற்சிகள் மேற்கொள்வதற்கு உகந்த நாளாகும் .குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .

மிதுனம்

இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் .சிலருக்கு எதிர்பாராத பண வரவுக்கு வாய்ப்பு உண்டு.கணவன் மனைவி இடையே ஒரு சில மனஸ்தாபங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .உத்யோகத்தில் சுறு சுறுப்புடனும் ,மகிழ்ச்சியாகவும் இருப்பீர்கள் .வியாபாரத்தில் முன்னேற்றமும் ,லாபமும் அதிகரிக்கும் .பிள்ளைகளின் படிப்பில் கவனத்தை செலுத்துதல் அவசியம் .

கடகம்

கடக ராசி நண்பர்களே புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .திருமணம் மற்றும் சுப காரியங்களில் முன்னேற்றமானது மகிழ்ச்சியை அளிக்கும் .வரவுக்கு ஏற்ற செலவீனங்களும் அதிகமாகும் .நண்பர்கள் இடத்தில் எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும்.

சிம்மம்

இன்று உங்களுக்கு மனதில் ஒரு சில குழப்பங்கள் வந்து போகும் .உங்களின் ஸத்ய பேச்சின் மூலம் ஒரு சில காரியங்களை செய்து முடிப்பீர்கள் .குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும் .மற்றவர்களிடம் பேசும்போது கவனமும் ,நிதானமும் அவசியமாகும் .பண வரவுகளும் ,திடீர் செலவுகளும் ஏற்படலாம் .குடும்பத்தில் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கிடைக்கும். சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும். வியாபாரம் வழக்கம்போலவே நடைபெறும்.

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும். வரவுக்கு மீறிய செலவுகள் அதிகமாவதால் சிலருக்கு கடன் வாங்கும் சூழ்நிலையும் ஏற்படும் .உறவினர்களால் குடும்பத்தில் சில பிரச்னைகள் ஏற்பட்டாலும் சமாளித்துவிடுவீர்கள். சகோதரர்களால் ஆதாயம் உண்டு. பழைய கடன்கள் விரைவில் வசூலாகும் .கணவன் மனைவி இடையே ஏற்பட்ட சங்கடங்கள் தீரும் .வியாபாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .

துலாம்

இன்று புதிய முயற்சிகள் உங்களுக்கு கைக்கூடும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும் .பண வரவுக்கு வாய்ப்புகள் அதிகமாகும் .கணவன், மனைவிக்கிடையே அந்நியோன்னியம் அதிகரிக்கும். சகோதரர் மூலம் நன்மை ஏற்படும்.எதிரிகளால் சில இடையூறுகள் ஏற்படலாம் ,கவனமுடன் செயல்படுதல் நல்லது .நண்பர்களால் நன்மையானது உண்டாகும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே இன்று முக்கிய முடிவுகள் எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும் .எதிலும் சிந்தித்து செயல்படுவீர்கள்.தேவையற்ற பிரச்சனைகளை தவிர்ப்பது நல்லது .முக்கிய பிரமுகர்களால் ஆதாயம் கிடைக்கும்.உத்தியோகத்தில் திறமையாக பேசுவதன் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும்.வியாபாரத்தில் சக வியாபாரிகளால் மறைமுகத் தொல்லைகள் ஏற்படக்கூடும்.

தனுசு

இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும்.கணவன் – மனைவிக் கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .பணவரவு இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேறும். இழுபறியான காரியங்கள் சாதகமாக முடியும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது.வியபாறைகளால் ஏற்பட்ட தடைகள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்கள் மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. முக்கிய முடிவு எடுக்கும் போது சிந்தித்து செயல்படுதல் நல்லது . எதிர்பார்த்த பணம் கிடைப்பது தாமதமாகும். சிலருக்கு பணிச்சுமை அதிகரிக்கும்.புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது .வீண் பிரச்சனைகளை தவிர்த்தல் நல்லது .

கும்பம்

இன்று உங்களுக்கு மகிழ்ச்சியும் ,சந்தோஷமும் நிறைந்த நாளாக அமையும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .எதிர்பார்த்த பணம் கைக்கு வரும் .திருமணம் மற்றும் சுப காரியங்களில் நன்மையானது உண்டாகும் .வாழ்க்கைத்துணைவழியில் எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.தந்தையுடன் ஏற்பட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும்.கணவன் மனைவி இடையே விட்டு கொடுத்து நடப்பது நல்லது .

மீனம்

மீன ராசி நண்பர்களே இன்று ஒரு சிலருக்கு பண வரவு அதிகரிக்கும் .சகோதரர்களுக்காக செலவு செய்யவேண்டி வரும். சிலருக்கு நண் பர்கள் மூலம் பணவரவு கிடைப்பதற்கு வாய்ப்பு உண்டு.எடுத்த காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .வியாபாரத்தில் எதிரிகளால் ஏற்பட்ட இடையூருகள் நீங்கி நன்மையானது உண்டாகும் .எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடிப்பீர் கள். சகோதரர்கள் உதவி கேட்டு வருவார்கள்.

Next Post

பீகார் சட்டமன்ற தேர்தல் 2020 : பாஜக - ஐக்கிய ஜனதா தளம் கூட்டணி முன்னிலை

Tue Nov 10 , 2020
பீகார் சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கையானது எண்ணப்பட்டு வரும் நிலையில் ,தற்போது நிலவரப்படி பாஜக கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணிக்கும் ,காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே கடும் போட்டியானது நிலவி வருகிறது .பீகார் சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களில் பாஜக முன்னிலையில் உள்ளது . பீகார் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 243 இடங்களில் ,தற்போது 12 மணிநேர நிலவரப்படி பாஜக கூட்டணியானது […]
bihar-election-result-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய