இன்றைய ராசி பலன்கள் : 09 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நாள் உங்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய நாளாக அமையும்.எதிர்பார்த்த உதவியானது நண்பர்கள் மூலம் கிடைக்க வாய்ப்புகள் அதிகமாகும்.வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .பிள்ளைகள் உங்களுக்கு நன்மதிப்பை தேடித் தருவார்கள் . வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.

ரிஷபம்

இன்று நீங்கள் மிகவும் உற்சாகத்துடன் காண்பீர்கள் .எடுத்த காரியத்தில் வெற்றியானது கிடைக்கும்.திருமணம் மற்றும் சுப காரிய பேச்சு வார்த்தைகளில் முன்னேற்றம் இருக்கும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும்.குடும்பத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதற்குமுன் நன்கு யோசித்தல் நல்லது ஆகும்.வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமானது கூடுதல் மகிழ்ச்சியை தரும்.

மிதுனம்

இன்று நீங்கள் எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள் .கணவன் மனைவி இடையே இருந்த சங்கடங்கள் நீங்கி ஒற்றுமையானது அதிகரிக்கும் .நண்பர்கள் மூலம் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உண்டு.வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது.உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .பேச்சில் கவனமும் ,செயலில் நிதானமும் அவசியமாகும் .வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது முன்னேற்றத்துக்கு வழி வகுக்கும் .

கடகம்

கடக ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்ப பொருளாதார நிலைமை சிறப்பாக அமையும் .குடும்பத்தில் உள்ள பெரியவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது .புதிய பொருட்கள் வாங்குவதற்கு சிறந்த நாளாக அமையும் .கணவன் – மனைவி இடையே ஒற்றுமையானது அதிகரிக்கும் .உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைப்பது தாமதமாகும். சிலருக்கு அவ்வப்போது மனதில் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

சிம்மம்

இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும்.உறவினர்கள் மூலம் சில பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .சிலருக்குக் கடன் வாங்கக்கூடிய சூழ்நிலையும் ஏற்படும். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும்.உங்களின் புதிய முயற்சிகளுக்கு நண்பர்களின் உதவியும் ஒத்துழைப்பும் கிடைக்கும்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே இருக்கும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறலாம்.பிள்ளைகளால் மகிழ்ச்சி தரும் செய்தி கிடைக்க வாய்ப்பு உள்ளது. உறவினர்களால் ஆதாயம் கிடைக்கும். நண்பர்கள் உதவி கேட்டு வருவார்கள்.தொழில் ரீதியாக புதிய யுக்திகளை கையாள்வீர்கள்.குடும்பத்தில் சுப செலவுகள் உண்டாகலாம் .வியாபாரத்தில் விற்பனையும் லாப மும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

துலாம்

இன்று நீங்கள் எதிர்பார்த்த இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும் .புதிய முயற்சிகள் வெற்றியை தேடித் தரும் .உறவினர்கள் மூலம் சுபநிகழ்ச்சிக்கான பேச்சுவார்த்தை சாதகமாகும். வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .அனுபவமுள்ளவர்களின் ஆலோசனைகளால் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.அரசாங்க ரீதியாக சில காரியங்கள் கைக்கூடும் .வியாபாரத்தில் பணியாளர்கள் உற்சாகத்துடன் செயல்படுவார்கள்.

விருச்சிகம்

இன்று நீங்கள் கவனமுடன் செயல்படுதல் நல்லது .மற்றவர்களுடன் பேசும்போது கவனமுடனும் ,நிதானமாகவும் செயல்படுதல் நல்லது.வீண் விவாதங்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் வழக்கம்போல நடைபெறும்.உத்தியோகத்தில் சில பிரச்சனைகள் ஏற்படலாம் .எதிலும் விழிப்புடன் இருத்தல் அவசியம் .

தனுசு

குடும்பத்தில் ஒருவரை ஒருவர் அனுசரித்து நடப்பது நல்லது .நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும் .புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம் .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை .குடும்பத்தில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும் .வியாபாரத்தில் வாடிக்கையாளர்களால் சில பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், அவர்களிடம் அனுசரணையாக நடந்துகொள்ளவும்.

மகரம்

மகர ராசி நன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் எதிலும் கவனமுடன் நடப்பது நல்லது .பிள்ளைகள் உங்கள் விருப்பப் படி நடந்துகொள்வார்கள். நண்பர்கள் கேட்கும் உதவியை மகிழ்ச்சியுடன் செய்து தருவீர்கள். வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும் .கணவன் – மனைவிக்கிடையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கி, ஒற்றுமையானது அதிகரிக்கும்.வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபமானது கூடுதல் மகிழ்ச்சியை தரும் .

கும்பம்

இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .புதிய முயற்சிகள் அனைத்தும் வெற்றியை தேடித் தரும் .வெளியூர் பயணங்களால் லாபமானது கிடைக்கும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றமானது உண்டாகும்.வியாபாரத்தில் விற்பனை அதிகரிக்கும். சக வியாபாரிகளால் ஏற் பட்ட இடையூறுகளை முறியடித்து வெற்றியை காண்பீர்கள் .

மீனம்

இன்று எடுக்கும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும் .பண வரவு அதிகரிக்கும் .புதிய முயற்சிகளில் யோசித்து ஈடுபடுவது நல்லது.பூர்விக சொத்துக்களால் நன்மையானது உண்டாகும் .தொழில் ரீதியாக வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு கிடைக்கும் .ஆடை நகைகள் சம்பந்தமான பொருட்களை வாங்குவீர்கள் .கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும் .வியாபா ரத்தில் வழக்கமான நிலையே காணப்படும்.

Next Post

இன்றைய ராசி பலன்கள் : 10 -11 -2020

Tue Nov 10 , 2020
மேஷம் மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் துணிச்சலாகவும்,தன்னம்பிக்கையுடனும் செயல்படுவீர்கள் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உறவினர்களுடன் கருத்துவேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளதால் பொறுமையை கடைப்பிடித்தல் நல்லது.உங்கள் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .வீண் விவாதத்தை தவிர்த்தல் நல்லது .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் . ரிஷபம் இன்று உங்களுக்கு மன நிறைவு தரும் நாளாக அமையும் .எதிர்பாராத பண வரவுகளும் ,வீண் செலவுகளும் வந்து […]
indraya-raasi-palangal-10-11-2020-
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய