
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு நல்ல நாளாகவும் ,உற்சாகம் நிறைந்த நாளாகவும் அமையும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் மற்றும் வியாபார ரீதியாக நல்ல திட்டங்களை தீட்டுவீர்கள் .நீங்கள் எதிர்பாராத செலவுகள் வரக்கூடும் .குடும்பத்தில் நல்ல மகிழ்ச்சியும் ,அவ்வப்போது சிறு சிறு மன சலப்புகள் ஏற்பட்டு நீங்கும் . உங்கள் குடும்ப உறவினர்கள் உங்களுடைய ஆலோசனைகளை கேட்டு நடப்பார்கள் .
ரிஷபம்
இன்று நீங்கள் உற்சாகத்தோடு உங்கள் வேலையை முன்னின்று செய்து முடிப்பீர்கள் .புதிய முயற்சிகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .நண்பர்களால் ஒரு சிலருக்கு மன கஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .உங்கள் துணைவி உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்.வியாபாரமானது கணிசமான முறையிலேயே காணப்படும் .நீங்கள் பொறுமையை கடைப்பிதல் நல்லது ஆகும் .பழைய கடன்களை திருப்பித் தருவீர்கள் .
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி நிறைந்த நாளாக அமையும் .பிள்ளைகளுடன் உற்சாகமாக இருப்பீர்கள் .கணவன் மனைவி இடையே மன கஷ்டங்கள் விலகி நெருக்கம் உண்டாகும் .வியாபாரத்தில் வரவு ஆனது கணிசமாகவே நடைபெறும் ,உங்கள் வேலை ஆட்களை பகைத்து கொள்ளாதீர்கள் .உங்கள் உறவினர்கள் மூலம் உங்களுக்கு பிரச்சனைகள் வரலாம் .உங்கள் தாய் வழி உறவு முறையில் ஆதாயம் கிடைக்கும் .
கடகம்
இன்று நீங்கள் வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது ஆகும் .இன்று உங்களுக்கு செலவுகள் அதிகரிக்கும் நாள் ஆகும் .வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும் கூடுதல் லாபம் கிடைக்கும் .நண்பர்களின் உதிவியானது கிடைக்கும் .உங்களின் துணைவி வழியில் உங்களுக்கு நல்ல செய்தியானது வாய்த்து சேரும் .உங்கள் அலுவலங்களில் கவனமாக இருத்தல் அவசியமாகும் .
சிம்மம்
இன்று நீங்கள் எடுத்த காரியங்கள் கைகூடும் ,புதிய முயற்சிகள் சாதகமாக அமையும்.பெற்றோர்களின் உதவியானது கிடைக்கும் .உங்களின் பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.
வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் ,பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது .பொறுமையை கடைபிடித்தல் நல்லது .மற்றவர்களிடம் பேசும்போது கவனமாக பேசுதல் நல்லதாகும் .பிள்ளைகள் உங்களின் வார்த்தைகளை கேட்டு நடப்பார்கள் .
கன்னி
இன்று உங்களுக்கு நல்ல நாளாக அமையும் .பல முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் .பெரியோர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பது நல்லது ஆகும் .குடும்பம் சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க இது உகந்த நாளாகும் .நிதானமாக பேசுதல் மற்றும் நடத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் எதிர்பார்த்த லாபமும் கிடைக்கும் .உங்கள் உடன் இருப்பவர்கள் உங்களது ஆலோசனையை கேட்டு நடப்பார்கள் .
துலாம்
இன்று நீங்கள் பல தடைகளை கடந்து மற்றும் எதிர்ப்புகளை நீக்கி உங்கள் முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள் .நீங்கள் எதிர்பார்த்த இடத்தில் இருந்து பண வரவு அதிகரிக்கும் .இன்று நீங்கள் துணிச்சலாக முடிவு எடுக்கும் நாளாக அமையும் .ஒரு சிலருக்கு நண்பர்களின் உதவியானது கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைப்பதோடு ,வியாபாரத்தில் ஒரு சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் .
விருச்சிகம்
விருச்சிக ராசி நண்பர்களே இன்று நீங்கள் நிதானமாக செயல்படுதல் நல்லது ,ஏனென்றால் பதற்றம் மற்றும் தாழ்வுமனப்பான்மையானது வந்து சேரும் .வீண் செலவுகள் வந்து சேரும் .சிக்கனத்தை கடைபிடித்தால் நல்லது .கணவன் மனைவி இடையே வீண் சண்டைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாக இருப்பதால் ,ஒருவரை ஒருவர் விட்டு கொடுப்பது நல்லது ஆகும் .வியாபாரத்தில் ஏற்றமும் இறக்கமும் இல்லாமல் சமநிலையை ஏற்படும் .
தனுசு
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .பணவரவு எதிர்பாராத இடத்திலிருந்து வந்து சேரும் .கணவன் மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து நடத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும் .பழைய நண்பர்களை சந்தித்து பேசி மகிழ்வீர்கள்.பிள்ளைகளினால் சந்தோஷம் கிடைக்கும் .எதிர்பாராத நண்மைகள் உண்டாகும் . உங்கள் வியாபாரத்தில் மற்றும் உங்கள் எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும் .நீங்கள் எடுக்கும் முயற்சிகள் மற்றும் காரியங்கள் வெற்றியில் முடியும் .கணவன் -மனைவி இடையே நெருக்கம் அதிகமாகும் .பண புழக்கம் அதிகமாகும் .பெரியவர்களின் ஆதரவு கிடைக்குக்ம் .அலுவலக பணிகளில் சிறந்து விளங்குவீர்கள் .குடும்பத்தில் சிறு சிறு குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கிவிடும் .உங்கள் சகோதரர்கள் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள் .
கும்பம்
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும் .பண வரவு அதிகரிக்கும் உடன் செலவுகளும் அதிகரிக்கும் ,ஒரு சில மன கஷ்டங்களும் ,குழப்பங்களும் ஏற்படும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,லாபமும் கிடைக்கும் ,ஆனால் பணியாளர்கள் செலவுகள் அதிகரிக்கும் .பிள்ளைகளால் சில பிரச்சனைகள் அதிகரிக்கும் .இன்று நீங்கள் வீரபத்திரரை வழிபட்டால் வெற்றி கிடைக்கும் .
மீனம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் இருக்கும் நாளாகும் .குடுபத்தினர்கள் உங்கள் ஆலோசனையை கேட்பார்கள் .முக்கிய முடிவுகளை துணிச்சலாக எடுப்பீர்கள்
.உங்கள் துணைவியின் வழியில் உங்களுக்கு ஆதாயம் கிடைக்கும் .உங்கள் உடல் நலத்தில் கவனமும்,மற்றும் உங்கள் தாயாரின் உடல் நலத்தில் கவனமும் தேவை .வியாபாரத்தில் முன்னேற்றம் ஆனது சமநிலையாகவே இருக்கும் .