இன்றைய ராசி பலன்கள் : 06 -10 -2020

மேஷம்

மேஷ ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு மகிழ்ச்சியான நாளாக அமையும் .உங்கள் குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும் .கடந்த சில நாட்களை இருந்த காரியத்தடைகள் நீங்கி நன்மை அளிக்கும் .உறவினர்கள் மற்றும் வெளிவட்டாரத்தில் உங்களுக்கு நன்மதிப்பு கிடைக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும், லாபமும் கிடைக்கும் .உங்கள் அலுவலகங்களில் புதிய வாய்ப்புகளும் ,உங்கள் உயர் அதிகாரி இடத்தில் நல்ல மதிப்பும் கிடைக்கும் .

ரிஷபம்

ரிஷப ராசி அன்பர்களே இன்று உங்கள் ராசிக்கு சந்திரன் இருப்பதால் உங்கள் மன நிலையில் குழப்பமும் ,உங்களது பல்வேறு வேலைகளை நீங்களாகவே பார்க்க வேண்டும் .வீண் செலவீனங்கள் அதிகரிக்கும் ,ஆதலால் சிக்கனமாக இருத்தல் நல்லது .உங்களது கோபத்தைய் தவிர்த்தல் நல்லது ,இல்லையேல் உங்களது கோபத்தால் பல்வேறு இழப்புகள் வந்து சேரும் .உங்கள் வேளையில் கவனம் தேவை மற்றும் மற்றவர்களிடம் பேசும்போது நிதானம் மிக அவசியமாகும் .

மிதுனம்

மிதுன ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு பண வரவு ஆனது அதிகரிக்கும் ,கூடவே செலவினங்களும் வந்து சேரும் .எனவே சிக்கனமாக இருத்தல் அவசியம் .எளிதாக முடிக்க வேண்டிய வேலைகளை சிரமப்பட்டு முடிப்பீர்கள் .கணவன் மனைவி இடையே சிறு பிரச்சனைகள் வரலாம் ,எனவே விட்டுக்கொடுத்தல் என்பது மிக அவசியமாகும் .பொருளாதாரத்தில் கணிசமான நிலையே ஏற்படும் .உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை .

கடகம்

கடக ராசி அன்பர்களே இன்று உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் ,மகிழ்ச்சியும் அதிகரிக்கும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் மற்றும் லாபம் கிட்டும் .உங்கள் அலுவலகத்தில் நல்ல மதிப்பும் ,உங்கள் உயர் அதிகாரிகளின் அறிவுரையும் கிடைக்கும் .இன்று உங்களுக்கு இனிமையான நாளாக அமையும் .

சிம்மம்

சிம்ம ராசி அன்பர்களே இன்று உங்கள் உடன்பிறந்தவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பும் உடன் உங்கள் உடல் நலத்தில் மிகுந்த அக்கறையும் காட்டுவார்கள் .கடந்த சில நாட்களாக இருந்த கடன் பிரச்சனைகள் தீரும் .வியாபாரத்தில் உள்ள சில நுணுக்கங்களை புரிந்து கொள்வீர்கள் .அலுவலகங்களில் உங்கள் நிர்வாகத்தன்மை வெளிப்படும் .நீங்கள் எதிர்பார்த்த ஒரு சில விஷயங்கள் கைகூட வாய்ப்புகள் அதிகம் .

கன்னி

கன்னி ராசி அன்பர்களே இன்றைய நாள் உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாகவும் ,நன்மைபயக்கும் நாளாகவும் அமையும் .கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சனைகள் நெருங்கி ஒற்றுமையோடு இருப்பீர்கள் .உங்கள் நட்பு வட்டாரத்தில் புதியவர்கள் இணைவார்கள் .வெளியுலக அனுபவம் கிடைக்கும் .வியாபாரத்தில் போட்டிகள் குறைந்து நன்மையே நடைபெறும் .உத்தியோகத்தில் உழைப்பிற்கு ஏத்த நன்மைகள் கிடைக்கும் .

துலாம்

துலாம் ராசி அன்பர்களே இன்று நீங்கள் கவனமுடன் இருக்க வேண்டிய நாளாகும் .உங்களது புதிய முயற்சிகள் தாமதமாகும் .உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் கவனமுடன் இருத்தல் அவசியம் .எதையோ பறிகொடுத்ததுபோலவே இருப்பீர்கள் .வேளையில் கவனம் தேவை மற்றும் சக ஊழியர்களிடம் அனுசரித்து போவது நல்லது .பேசும் வார்த்தையில் கவனம் தேவை சிறு வார்த்தை கூட பெரிய பிரச்சனைக்கு வழிவகுக்கும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி அன்பர்களே இன்று உங்கள் பிள்ளைகள் உங்களுக்கு மகிழ்ச்சியானது கிடைக்கும் .உங்களால் முடிக்க முடியாத சில வேலைகள் மிக சுலபமாக முடியும் .குடும்பத்தில் மகிழ்ச்சி
உண்டாகும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,வேலையாட்களின் ஆதரவும் கிடைக்கும் .இன்று உங்கள் எண்ணங்கள் ஈடேறும் நாளாக அமையும் .உங்கள் மனைவி வழியில் ஆதரவானது கிடைக்கும் .

தனுசு

தனுசு ராசி அன்பர்களே உங்கள் குடும்பத்தில் உங்களுக்கு மதிப்புகள் அதிகரிக்கும் மற்றும் உங்கள் ஆலோசனைகளை ஏற்று நடப்பார்கள் .அதிகாரப் பதவியில் இருப்பவர்களது ஆதரவு கிடைக்கும் .வழக்கில் நல்ல தீர்ப்பானது வந்து சேரும் .உங்கள் உடல் நலம் நன்றாக இருக்கும் .பேசும் வார்த்தையில் கவனம் அவசியம் ஆகும் .

மகரம்

மகர ராசி அன்பர்களே இன்று புதிய சிந்தனைகள் மற்றும் புதிய வாய்ப்புகள் தேடி வரும் .வியாபாரத்தில் நல்ல முன்னேற்றமும் ,புதிய வாடிக்கையாளர்களின் வருகையும் அதிகரிக்கும்.
குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும் .வேளையில் அதிக கவனம் தேவை .வீண் செலவுகளை குறைத்து சேமிப்புக்கான வழிகளை தேடுவீர்கள் .

கும்பம்

கும்ப ராசி அன்பர்களே இன்று உங்களுக்கு மகிழ்ச்சி தரும் நாளாக அமையும் .உங்கள் தாயின் உடல் நலத்தில் கவனம் தேவை.நீங்கள் எதிர்பார்த்த வேலைகள் தடையின்றி நடைபெறும் .இன்றைய நாள் நீங்கள் தடையை தகர்த்து வென்றெடுக்கும் நாளாக அமையும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும் .வியாபாரத்தில் திடீர் முன்னேற்றமும் லாபமும் கிடைக்கும் .

மீனம்

மீன ராசி அன்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் .உங்கள் உறவினர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் .வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக்கொடுப்பதோடு நல்ல அனுபவமிக்க ஆட்களை தேடுவீர்கள் .முக்கியமான ஒரு சில முடிவுகளை துணிச்சலாக எடுப்பீர்கள் .வியாபாரத்தில் ஒரு சில நுணுக்கங்களை கற்று தேர்வீர்கள்.

Next Post

6 அடிக்கு மேலாக காற்றில் பரவும் கொரோனா : ஆராய்ச்சியில் உறுதிப்படுத்தும் அமெரிக்க விஞ்ஞானிகள்!

Tue Oct 6 , 2020
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புத்துறை (சிடிசி ) ஆனது ,6 அடிக்கும் மேலாக காற்றில் கொரோனா வைரஸ்ன் தாக்கம் இருக்கும் என மீண்டும் தனது கண்டுபிடிப்பில் உறுதிசெய்துள்ளது . இது தொடர்பாக சில தினங்களுக்கு முன்பு சிடிசி இதேபோன்று ஒரு எச்சரிக்கையை விடுத்திருந்தது .அப்போது அது பெரும் விவாதத்திற்கு உள்ளதால் அது திரும்பப் பெறப்பட்டது . 6 அடிக்கு அப்பால் பரவும் கொரோனா வைரஸ்: கொரோனா வைரஸ் ஆனது […]
corona-spread-6-feet-above
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய