
மேஷம்
மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் பொறுமையையும் ,நிதானத்தையும் கடைபிடித்தல் அவசியமாகும் .உறவினர்களால் சில சங்கடங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வீண் விவாதனபிகளை தவிர்த்தல் நல்லது .உத்தியோகத்தில் ஒரு சில தடைகளை சந்திக்க நேரிடும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது மந்தமாகவே நடைபெறும் .
ரிஷபம்
இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு வெற்றியை தேடி தரும் . .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .கணவன் மனைவி இடையே வீண் பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளதால் ,ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்து நடப்பது நல்லது .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது
மிதுனம்
மிதுன ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு சந்தோசம் நிறைந்த நாளாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .புதிய முயற்சிகள் வெற்றிக்கு வழி வகுக்கும் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .சகோதர வழியில் உதவியானது கிடைக்கும் .சிலருக்கு வாழ்க்கைத்துணை மூலம் எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது .
கடகம்
இன்று உங்களுக்கு அனுகூலமான நாளாக அமையும் .சகோதரர்களால் சில பிரச்னைகள் ஏற்படும். . சுப செய்திகள் தேடி வரும் .உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும் .வெளி வட்டாரத்தில் நன் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் உங்களது வேலைத்திறமையை வெளிக்காட்டுவீர்கள் .உறவினர்கள் மூலம் ஆதாயமானது கிடைக்கும் .வியாபாரத்தில் லாபமானது அதிகரிக்கும்
சிம்மம்
இன்று நீங்கள் சுறு சுறுப்பாகவும், மகிழ்ச்சியாகவும் செயல்படுவீர்கள் .உறவினர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். மற்றவர்களுடன் வீண் விவாதத்தில் ஈடுபடவேண்டாம். கணவன் மனைவி இடையே சில கருது வேறுபாடுகள் ஏற்படலாம் . பணி யாளர்களைத் தட்டிக்கொடுத்து வேலை வாங்கவும். .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும் .
கன்னி
கன்னி ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு உற்சகமான நாளாக அமையும் .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகமாகும் .முக்கிய பிரமுகர்களின் அறிமுகமானது கிடைக்கும் உங்கள் துணைவியின் விருப்பத்தை நிறைவேற்றுவீர்கள் .எதிர்ப்பாராத செலவுகள் இருப்பதால் சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும் .உங்கள் முயற்சிகளுக்கு பங்குதாரர்களின் ஆதரவு கிடைக்கும்.
துலாம்
இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடனும் நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .புதிய முயற்சிகளை தவிர்க்க வேண்டும் .வீண் விவாதங்களை தவிர்க்கவும் .பேசும் பேச்சில் கவனம் தேவை .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் . உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போவது நல்லது .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .பணம் கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை ,யாரையும் நம்ப வேண்டாம்.சிந்தித்து செயல்படுதல் நல்லது .
விருச்சிகம்
இன்று உங்கள் பொருளாதார நிலை சிறப்பாக அமையும் .நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.குடும்பத்தில் உள்ளவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள் .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .மகிழ்ச்சி தரக்கூடிய செய்திகள் வந்து சேரும் .
தனுசு
இன்று உங்கள் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .நண்பர்களிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.பிள்ளைகளால் அலைச்சலும் தேவையற்ற செலவுகளும் ஏற்படக்கூடும். .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .உறவினர்களால் ஏற்பட்ட மறைமுகத் தொல்லைகள் மறையும். சிலருக்கு தந்தைவழியில் ஆதாயமானது கிடைக்கும் .வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .
மகரம்
மகர ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் வரக்கூடும் என்பதால் ,வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது . தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. பூர்வீக சொத்துக்கள் தொடர்பாக அலைச்சல், வீண் செலவுகள் உண்டாகலாம். வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கணிசமாகவே நடைபெறும் .
கும்பம்
இன்று நீங்கள் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் செயல்படுவீர்கள் .குடும்ப பொறுப்புகளில் அதிக அக்கறை எடுத்துக்கொள்வீர்கள்.குடும்ப தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.கணவன் – மனைவியிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.உத்தியோக ரீதியாக எடுத்த முயற்சிகள் வெற்றியை தேடி தரும் .
மீனம்
இன்று நீங்கள் பொறுமையுடன் செயல்படவேண்டிய நாளாகும் .நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.பொருளாதாரா ரீதியான தடைகள் நீங்கி நன்மை உண்டாகும் .செய்யும் செயல்களில் கவனம் தேவை .மற்றவர்களுடன் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும். அக்கம்பக்கத்தில் இருப்பவர்கள் உதவிகரமாக இருப்பார்கள். .வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.கொடுத்த கடன்கள் விரைவில் வசூலாகும் .