இன்றைய ராசி பலன்கள் : 02 -12 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நம்பிக்கையுடனும் தைரியத்துடனும் செயல்படுவீர்கள் .உங்கள் உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு வாழ்க்கைத்துணையின் ஆதரவு கிடைக்கும். பூர்விக சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும் மற்றும் அரசு வழிகளில் எதிர்பார்த்த காரியங்கள் கைக்கூடும்.வியாபாரத்தில் எதிர்பார்த்ததைவிட லாபம் கூடுதலாக இருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை தரும் .

ரிஷபம்

இன்று நீங்கள் எடுக்கும் காரியங்களில் அனுகூலமானது உண்டாகும் .குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய சம்பவங்கள் நடைபெறும் .மற்றவர்களிடம் வீண் பிரச்சனைகளையும் விவாதங்களையும் தவிர்த்தல் நல்லது .திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் முன்னேற்றமானது உண்டாகும் .வியாபாரத்தில் லாபமானது வழக்கம் போலவே நடைபெறும் .வீட்டின் தேவைகளை வாங்கி மகிழ்வீர்கள் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .மற்றவர்களிடம் பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.சுப காரியங்கள் கைக்கூடிவரும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு. சகோதர வகையில் எதிர்பாராத ஆதாயம் ஏற்படக்கூடும்.
தொழில் சம்பந்தமான விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடி இருக்கும்.

கடகம்

இன்று உங்களுக்கு எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு .புதிய முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .குடும்பத்தில் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுத்தால் தேவையற்ற வீண் பிரச்சனைகளை தவிர்க்கலாம் .அலுவலகத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது நன்மையை தரும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது மகிழ்ச்சி தரும்.

சிம்மம்

சிம்ம ராசி நண்பர்களே இன்று நீங்கள் நிதானமாகவும் ,பொறுமையாகவும் செயல்படவேண்டிய நாளாகும் .பிள்ளைகளால் ஏற்பட்ட மன கஷ்டங்கள் தீரும் .புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .மற்றவர்களுடன் வீண் மனஸ்தாபம் ஏற்படக்கூடும் என்பதால், பேசும்போது பொறுமையைக் கடைப்பிடிக்கவும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

கன்னி

இன்று உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் மகிழ்ச்சியும் உண்டாகும்.சிலருக்கு எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு.குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பீர்கள் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவாக இருப்பார் .பேசும் வார்த்தைகளில் கவனம் தேவை .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

துலாம்

துலாம் ராசி நண்பர்களே வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .எதிர்பாராத செலவுகளால் கடன் வாங்க நேரிடும் .நண்பர்களின் ஆதரவானது உங்களுக்கு கிடைக்கும் .உறவினர்களின் வழியால் ஆதாயமானது கிடைக்கும் .வியாபாரம் எதிர்பார்த்தபடியே நடக்கும். பணியாளர்களால் செலவுகள் ஏற்படும்.

விருச்சிகம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையாகவும் நிதானமாகவும் செயல்படுதல் நல்லது .எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு இருப்பதுடன், எதிர்பாராத செலவுகளும் ஏற்படக்கூடும்.உத்தியோகத்தில் சகா ஊழியர்களுடன் வீண் வாக்குவாதத்தை தவிர்த்தல் நல்லது .வெளியூர் பயணங்களால் நன்மையானது உண்டாகும் .வியாபாரமானது கணிசமாகவே நடைபெறும் .

தனுசு

இன்று நீங்கள் சுறுசுறுப்பாகவும் ,மகிச்சியுடனும் செயல்படுவீர்கள் .உடல் ஆரோக்கியம் சிறப்பாக அமையும் .கடன் பிரச்சனைகள் தீர்ந்து நன்மையானது உண்டாகும் .சகோதரர்களால் செலவுகள் ஏற்படக்கூடும். முக்கிய முடிவுகள் எடுப்பதில் அவசரம் வேண்டாம்.வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உறவினர்கள் மூலம் உதவியானது கிடைக்கும் .நீங்க எடுக்கும் அனைத்து செயல்களும் உங்களுக்கு சாதகமாக அமையும் .கொடுத்த கடன்கள் விரைவில் வசூலாகும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும் .வீட்டின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .வியாபாரமானது வழக்கம் போலவே நடைபெறும் .

கும்பம்

கும்ப ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு பண வரவு ஆனது அதிகரிக்கும் .நண்பர்களின் உதவியால் வியாபாரத்தில் முன்னேற்றமானது உண்டாகும் .வாழ்க்கைத்துணை உங்கள் முயற்சிக்கு ஆதரவு தரு வார்.பிள்ளைகளால் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும் .புதிய நட்பு மகிச்சியை தரும் .வியா பாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்.

மீனம்

இன்று நீங்கள் முக்கிய முடிவுகளை எடுப்பதற்கு உகந்த நாளாக அமையும் .உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சியானது உண்டாகும் .கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.மனதில் தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாகும் .தொழிலில் ஏற்பட்ட இடையூறுகளை சமாளித்து முன்னேற்றம் காண்பீர்கள் .வியாபாரத்தில் பணி யாளர்களின் ஒத்துழைப்பால் விற்பனையும் லாபமும் அதிகரிக்கும்.

Next Post

சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் விக்கெட்டை வீழ்த்தினார் தமிழக வீரர் நடராஜன்

Wed Dec 2 , 2020
தமிழக வீரர் நடராஜன் சர்வதேச கிரிக்கெட் தொடரில் இன்று ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக களமிறங்கி தனது பந்து வீச்சின் மூலம் முதல் விக்கெட்டை வீழ்த்தி தடம் பதித்தார் . ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது அதில் நடராஜன் பெயர் கடந்த அக்டோபர் மாத இறுதியில் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஒருநாள் போட்டி, டெஸ்ட், டி20 என எந்த அணியிலும் அவர் விளையாடாமல் , கூடுதல் பந்து […]
Tamil-cricket-player-T.Natarajan
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய