இன்றைய ராசி பலன்கள் : 02 -11 -2020

மேஷம்

மேஷ ராசி நண்பர்களே இன்று நீங்கள் சுறு சுறுப்புடனும் உற்சாகமாகவும் காண்பீர்கள் .உறவினர்களின் வருகையால் வீட்டில் மகிழ்ச்சியானது உண்டாகும் .சிலருக்கு எதிர்பார்த்த பண வரவுக்கு வாய்ப்பு உண்டு .வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள் .உத்தியோகத்தில் நன்மதிப்பும் ,உதவிகளும் கிடைக்கும் .கணவன் மனைவி இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும் .வியாபாரத்தில் லாபமானது கணிசமாகவே நடைபெறும் .

ரிஷபம்

இன்று நீங்கள் பொறுமையுடனும் நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .இன்று நீங்கள் ஓய்வெடுக்க முடியாத அளவிற்கு வேலைச்சுமையும் அலைச்சலும் அதிகரிக்கும்.பிள்ளைகளால் சில சங்கடங்கள் ஏற்பட்டு நீங்கும் .வீண் விவாதங்களையும் பிரச்சனைகளையும் தவிர்த்தல் நல்லது .மற்றவர்களிடம் பேசும்போது நிதானமும் கவனமும் அவசியமாகும் .வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

மிதுனம்

மிதுன ராசி நண்பர்களே இன்று நீங்கள் எடுக்கும் முயற்சிகள் உங்களுக்கு சாதகமாக அமையும் .எதிர்பார்த்த உதவியானது கிடைக்கும் .நீங்கள் எடுக்கும் முயற்சிக்கு உங்கள் மனைவி துணையாக இருப்பார்கள் .வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபமானது கிடைக்கும் .உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடப்பது நல்லது .

கடகம்

இன்று நீங்கள் தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள் .சகோதரர்களின் வழியில் உதவியானது கிடைக்கும் . குடும்பத்தில் ஒற்றுமையானது அதிகரிக்கும் .உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .வெளி வட்டாரத்தில் நன் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் .உத்தியோகத்தில் உங்களது வேலைத்திறமையை வெளிக்காட்டுவீர்கள் .உறவினர்கள் மூலம் ஆதாயமானது கிடைக்கும் .வியாபாரத்தில் லாபமானது எதிர்பார்த்த படியே இருக்கும் .

சிம்மம்

இன்று உங்களுக்கு சந்தோஷம் நிறைந்த நாளாக அமையும் .பழைய கடன் பிரச்சனைகள் தீரும் .குடும்பத்தில் பொருளாதார நிலை மந்தமாகவே இருக்கும் .பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள் .முக்கிய பிரமுகர்கள் அறிமுகம் ஆவார்கள்.குடும்பத்தில் முக்கிய முடிவுகளை கலந்து ஆலோசித்து எடுப்பீர்கள் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் வழக்கம் போலவே நடைபெறும் .

கன்னி

கன்னி ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு அதிர்ஷ்டமான நாளாக அமையும் .கணவன் மனைவி இடையே இருந்த சில பிரச்சனைகள் நீங்கி நெருக்கமானது அதிகமாகும் .மனதில் ஒரு சில குழப்பங்கள் ஏற்பட்டு விலகும் .எதிர்ப்பாராத செலவுகள் இருப்பதால் சிக்கனமாக இருத்தல் அவசியமாகும் .வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் மந்தமாகவே நடைபெறும் .

துலாம்

இன்று உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் பொறுமையுடனும் நிதானமுடனும் செயல்படுதல் நல்லது .வீண் விவாதங்களை தவிர்க்கவும் .பேசும் பேச்சில் கவனம் தேவை .கணவன் மனைவி இடையே நெருக்கமானது அதிகரிக்கும் . உத்தியோகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து போவது நல்லது .வியாபாரத்தில் ஒரு சில யுக்திகளை கையாளுவீர்கள் .ஒரு முடிவுகளை எடுப்பதற்கு முன் பலரிடம் ஆலோசனைகளை பெற்று முடிவுகளை நீங்களே எடுத்தால் வேண்டும் .

விருச்சிகம்

விருச்சிக ராசி நண்பர்களே திருமணம் மற்றும் சுப காரியங்களுக்கான முயற்சிகள் வெற்றியடையும் .பிள்ளைகளால் மகிழ்ச்சியானது உண்டாகும் .எதிரிகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். வாழ்க்கைத்துணையால் ஆதாயம் கிடைக்கும்.வெளிவட்டாரத்தில் புது அனுபவம் ,அறிமுகமும் உண்டாகும் .வியாபாரத்தில் பணியாளர்களை அனுசரித்து நடப்பது நல்லது .

தனுசு

இன்று நீங்கள் பொறுமையை கடைபிடித்தல் அவசியமாகும் .கணவன் மனைவி இடையே ஒரு சில கருது வேறுபாடுகள் ஏற்பட்டு நீங்கும் .உங்களின் உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும் .கணவன் – மனைவிக்கிடையே சிறு அளவில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு நீங்கும். சிலருக்கு தந்தைவழியில் சில பிரச்னைகள் ஏற்பட்டு நீங்கும்.வியாபாரம் வழக்கம் போலவே நடைபெறும் .

மகரம்

மகர ராசி நண்பர்களே இன்று உங்களுக்கு தேவையற்ற செலவுகள் வரக்கூடும் என்பதால் ,வீண் செலவுகளை தவிர்த்தல் நல்லது .உங்களின் முயற்சிகளுக்கு வாழ்க்கைத்துணை ஆதரவாக இருப்பார். தாயாரின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.பழைய பிரச்சினைகள் தீரும். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள்.வீட்டிற்கு விருந்தினர்களின் வருகை மகிழ்ச்சியை தரும்

கும்பம்

இன்று நீங்கள் எடுக்கும் புதிய முயற்சிகள் சாதகமாக அமையும் .தாயாருக்கு மருத்துவச் செலவுகள் ஏற்படும் என்பதால் உடல் நலத்தில் கவனம் தேவை .பணவிரயத்துக்கு வாய்ப்பு உண்டு. வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் சுமாராகத்தான் இருக்கும்.கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும்.

மீனம்

இன்று நீங்கள் எடுத்த காரியங்களில் வெற்றியானது கிடைக்கும் .நண்பர்களின் சந்திப்பு மகிழ்ச்சி தரும்.உடன் பிறந்த சகோதரர்களால் நன்மையானது உண்டாகும் .செய்யும் செயல்களில் கவனம் தேவை .குடும்பத்தில் உள்ளவர்களின் தேவையை அறிந்து செயல்படுவீர்கள் .வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள்.வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர்பார்த்தபடியே இருக்கும்..

Next Post

தமிழ்நாடு வருமான வரித்துறையில் காலிப்பணியிடங்கள் - 2020 !! விண்ணப்பிக்க கடைசி தேதி - 27 -12 -2020

Tue Nov 3 , 2020
தமிழ்நாடு அரசு வருமானத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிக்கையை வெளியிட்டுள்ளது .உதவியாளர், தனியார் செயலாளர் , இன்ஸ்பெக்டர், கண்காணிப்பாளர் போன்ற 7 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்கள் ,விண்ணப்பிக்கும் முறை மற்றும் இதர தகுதிகளை முழுமையாக படித்து ,தகுதி வாய்ந்தவர்கள் தமிழ்நாடு வருமான வரித்துறையின் அதிகாரபூர்வ இணையத் தளமான https://www.incometaxindia.gov.in/ என்ற இணையதளத்திற்கு சென்று முறையாக விண்ணப்பிக்கலாம்.விண்ணப்பிக்கும் தேதியானது 08.10.2020 முதல் 27.12.2020 ஆம் தேதிக்குள் […]
income-tax-department-2020
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய