
பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதவுள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு தனித்தேர்வராக பிளஸ் 1 தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மற்றும் பெறாத மாணவர்கள் அனைவருமே ,தற்போது மே (2021) மாதத்தில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தேர்வுக்கு,தனித்தேர்வர்கள் இணையதளம் மூலம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குனர் சி .உஷாராணி தெரிவித்துள்ளார் .
தனித்தேர்வர்கள் மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத் தேர்வுத் துறை மையங்களுக்கு நேரடியாக சென்று இன்று பிற்பகல்(பிப்ரவரி 26 ) முதல் மார்ச் 6 வரையிலான நாட்களில் இணையதள மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம் .
பிப்ரவரி 26 முதல் மார்ச் 6 வரை உள்ள தேதிகளில் விண்ணப்பிக்க தவறிய தனித்த தேர்வர்கள் மார்ச் 8 ,9 தேதிகளில் அரசுத் தேர்வுத் துறை மையங்களுக்கு நேரடியாக சென்று தட்கல் முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம் .இம்முறையில் விண்ணப்பங்களை பதிவு செய்வோர் தேர்வு கட்டணங்களுடன் ரூ .1000 சிறப்பு கட்டணங்களாகச் செலுத்தி இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் .
மேலும் விவரங்களைப்பெற விரும்புவோர் அனைத்து முதன்மை கல்வி அலுவலர் அலுவலகங்கள் ,அனைத்து அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகங்கள் மற்றும் அனைத்து மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகங்களுக்கு சென்று விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் .