இந்தியாவின் முதல் பதக்கம் : வெள்ளி மங்கை மீராபாய் சானு..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வெகு விமர்சையாக ஒலிம்பிக் போட்டிகள் தொடக்க நிகழ்ச்சிகளுடன் நேற்று (வெள்ளிக்கிழமை) அதிகாரபூர்வமாக தொடங்கப்பட்டது.தற்போது நடைப்பெற்று வரும் ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தனது முதல் பதக்கத்தை வென்றுள்ளது.

இந்திய வீராங்கனை மீராபாய் சானு பெண்கள் 49 கிலோ பளு தூக்குதல் போட்டியில் வெள்ளிப்பதகக்கம் வென்றுள்ளார்.இன்று காலை காலை 10.30 மணிக்கு மகளிர் 49 கிலோ பிரிவுக்கான போட்டிகள் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட மீராபாய் சானு 84 மற்றும் 87 கிலோ எடையை முதலில் தூக்கினார். தொடர்ந்து 89 கிலோ எடையை தூக்க அவர் முயற்சித்தபோது, அவரால் முடியவில்லை. இதைத்தொடர்ந்து அவர் 115 கிலோ எடையை அவர் தூக்கி இரண்டாவது இடத்தை பிடித்தார்.மேலும் ரஷ்யாவின் அனஸ்தேசியா கலாஷினா வெள்ளிப் பதக்கமும்,சுவிட்சர்லாந்தின் நினா கிறிஸ்டன் வெண்கலப் பதக்கமும் வென்றுள்ளனர்.

21 ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையாக பளு தூக்குதல் போட்டியில் இந்தியா பதக்கத்தை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 49 கிலோ எடை பிரிவில் மீராபாய் சானு வெற்றி பெற்று இந்தியாவிற்கு பெருமையையும், புகழையும் சேர்த்துள்ளார்.

இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை பெற்று தந்த மீராபாய் சானுவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் , பிரதமர் நரேந்திர மோடி, தமிழக முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.மேலும் பல்வேறு தலைவர்களும் மீராபாய் சானுவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Next Post

தமிழகத்தில் மாவட்ட வாரியாக கொரோனா நிலவரம்..

Sat Jul 24 , 2021
தமிழகத்தில் கொரோனா பாதிப்பானது படிப்படியாக குறைந்து கொண்டே வருகிறது.தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 1,819 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக கோவையில் 175 பேருக்கும், ஈரோட்டில் 132 பேருக்கும், சென்னையில் 127 பேருக்கும் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 24.88-ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த 27 பேர் பலியாகியுள்ளனர். இதன்மூலம் மாநிலம் […]
district-wise-corona-status-in-TN-24-7-21
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய