
அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா ஆனது “இந்தியன் சாட் “எனும் உலகிலேயே மிகச் சிறிய செயற்கைக்கோளுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது .இந்தியன் சாட் எனும் இந்த மிகச் சிறிய செயற்கைக்கோள், கரூர் மாவட்டத்தை சார்ந்த கல்லூரி மாணவர்களால் வடிவமைக்கப்பட்டது .
கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் படித்துவரும் கேசவன் மற்றும் தாந்தோன்றிமலை அரசு கலைக்கல்லூரியில் இயற்பியல் மூன்றாம் ஆண்டு படித்து வரும் அட்னான், அருண் ஆகிய மூவரும் ஒன்றாக இணைந்து சிறிய அளவிலான செயற்கைக்கோளை வடிவமைத்தனர் .
இந்த சிறிய வகை சாட்டிலைட் ஆனது புவியின் பல்வேறு தகவல்களை சேகரிக்க உதவுகிறது .
“இந்தியன் சாட்” செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டது எப்படி ?
அட்னான், அருண் மற்றும் கேசவன் ஆகிய மூவரும் செயற்கைக்கோள் வடிவமைப்பதற்கான வேலைகளை தனித்தனியாக பிரித்துக்கொண்டு செயல்பட தொடங்கினார்கள் .இவர்களுக்கு சென்னையில் உள்ள “ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியா’ அமைப்பு இவர்களுக்கு உதவியாக இருந்து வந்தது .பின்னர் நாசா அமைப்பால் நடத்தப்படும் ‘க்யூப் இன் ஸ்பேஸ்’ எனும் மாணவர்களுக்கான விண்வெளி ஆராய்ச்சி போட்டி குறித்து தெரியவந்தது.இதில் இம்மூவரும் பங்கேற்று தங்களது படைப்பான இந்தியன் சாட்டிலைட் பற்றி விவரித்தனர் .
70 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்து கொண்ட இப்போட்டியில் 80 படைப்புகள் பெறப்பட்டன ,இதில் சிறந்த படைப்பாக கரூர் மாணவர்களின் ‘இ-சாட்’ எனப்படும் ‘இந்தியன் சாட்டிலைட்’ தேர்வுக்குழுவாள் தேர்ந்தெடுக்கப்பட்டது .
‘இந்தியன் சாட்டிலைட்’ வடிவமைப்பில் டெஸ்டிங் இன்ஜினியர் ஆக கேசவனும்,ஹார்டுவேர் மற்றும் சாஃப்ட்வேர் வடிவமைப்பாளர் ஆக அருணும் மற்றும் வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப பொறியாளர் அட்னான் ஆகியோரும் தங்களது பணியினை சிறப்பாக செயலாற்றி புதிய படைப்பை மேற்கொண்டனர் .