
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 32-வது ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.
இன்று நடைபெற்ற மகளிருக்கான 69 கிலோ குத்துச்சண்டை போட்டியில் இந்தியாவின் லாவ்லினா துருக்கி வீராங்கனை புசேனாஸ் சுர்மெனெலியிடம் 5-0 என்ற கணக்கில் லாவ்லினா தோல்வியைத் தழுவினார்.இதன் மூலம் லாவ்லினா வெண்கலப் பதக்கம் பெற்றார்.
முன்னதாக, முதல் சுற்றில் தாக்குதல் ஆட்டத்தை தொடங்கிய சுர்மெலிக்கு 5 நடுவர்களும் 10 புள்ளிகள் அளித்தனர்.இரண்டாவது சுற்றிலும் அவரது செல்வாக்குத் தொடர்ந்தது.
காலிறுதிப் போட்டியில், லவ்லினா 4-1 என்ற புள்ளிக் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் சீன தைபேயின் நியான் சின் சேன்னைத் தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவின் சார்பில் பேட்மிண்டனில் பி.வி.சிந்து வெண்கலமும், பளு தூக்குதலில் மீராபாய் சானு வெள்ளியும் வென்றுள்ளனர். மூன்றாவதாக லாவ்லினா பதக்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.