
சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ்.மேலும்,இவர் மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 200 ஒரு நாள் ஆட்டங்களை ஆடிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.
இவர் இதுவரை 211 ஒரு நாள் போட்டிகளிலும் ,89 டி20 போட்டிகளிலும் மற்றும் 10 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.இந்நிலையில் இவர் தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணிக்கு எதிராக 3-வது ஒருநாள் போட்டியில் 36 (50 பந்துகள், 5 பவுண்டரிகள்) ஓட்டங்களை எடுத்து ,சர்வதேச கிரிக்கெட் போட்டியில் 10,000 ரன்களை பூர்த்தி செய்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து ,இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வார்ட்ஸ் (இவர் 309 ஆட்டங்களில் 10,273 ஓட்டங்களை பெற்றுள்ளார்) படைத்த சாதனையை தொடர்ந்து 10 ஆயிரம் ரன்களை கடந்த 2வது வீராங்கனை என்ற பெருமையையும் மிதாலி ராஜ் பெற்றுள்ளார்.மேலும் இவர் சார்லட் எட்வார்ட்ஸின் சாதனையை முறியடிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.