
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் ஈட்டி எறிதல் பிரிவில், இந்திய வீரர் நீரஜ் சோப்ரா அபாரமான திறமையை வெளிப்படுத்தி இந்தியாவிற்கு தங்கப் பதக்கத்தை பெற்றுத்தந்துள்ளார்.
ஒலிம்பிக் ஆண்கள் ஈட்டி எறிதல் போட்டியில் 23 வயதான நீரஜ்சோப்ரா தகுதி சுற்றில் 86.65 மீட்டர் தூரம் எறிந்து, இறுதிப் போட்டிக்கு முனனேறினார்.பின்னர் இறுதிப்போட்டியில் களம் கண்ட நீரஜ் சோப்ரா துவக்கம் முதலே சிறப்பான இலக்கை பதிவு செய்து முதலிடத்தில் இருந்தார்.மேலும் அடுத்தடுத்த சுற்றுகளிலும் அவரே முன்னிலை வகித்தார்.அவரை தொடர்ந்து வந்த ஜெர்மனி வீரர் வெபர், செக் குடியரசு வீரர்கள் வெஸ்லி, வத்லெஜ், பாகிஸ்தான் வீரர் நதீம் ஆகியோர் வீரர்களின் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை.
இறுதியாக 6 சுற்றுகளின் முடிவில், நீரஜ் சோப்ரா முதலிடத்தை பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். அவர் அதிகபட்ச தூரமாக 87.58 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து அசத்தினார்.
அரியானா மாநிலத்தைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா பல விளையாட்டு போட்டிகளில் பங்கேற்று தங்கம் வென்றுள்ளார்.குறிப்பாக ஆசிய விளையாட்டு, காமன்வெல்த் விளையாட்டு, ஆசிய சாம்பியன்ஷிப், தெற்காசிய விளையாட்டு, உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் ஆகிய முக்கியத்துவம் வாய்ந்த போட்டிகளில் தங்கம் வென்றுள்ளார்.ஆனால் முதன் முறையாக ஒலிம்பிக்கில் தங்கம் வென்று நீரஜ் சோப்ரா வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவுக்கு முதல் தங்கம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இன் மூலம் இந்தியாவின் மொத்த பதக்க எண்ணிக்கை 7 ஆக உயர்ந்துள்ளது.