டோக்கியோ பாராலிம்பிக் : அரையிறுதிக்கு நுழைந்த இந்திய வீராங்கனை பவினாபென் படேல்..

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் 16-வது பாராஒலிம்பிக் போட்டிகள் தற்போது நடைப்பெற்று வருகின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கான இந்த போட்டிகளில் 162 நாடுகளை சேர்ந்த 4,403 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

பாராஒலிம்பிக் போட்டியின் 4-வது நாளான இன்று,காலிறுதி ஆட்டத்தில் உலகின் 2ம் தரநிலை வீராங்கனையான செர்பிய வீராங்கனையை எதிர்த்து விளையாடிய இந்திய வீராங்கனை பவினா 11-5, 11-6, 11-7 என்ற செட்கணக்கில் வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

இந்திய வீராங்கனை அரையிறுதிக்கு முன்னேறியதால், இந்தியாவுக்கு முதல் பதக்கத்தை உறுதி செய்துள்ளார்.இதைப்போல் ஆடவருக்கான வில்வித்தை தகுதிச் சுற்றில் இந்திய வீரர் ராகேஷ் குமார் 3வது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இவர் மொத்தம் 699 புள்ளிகளைப் பெற்றுள்ளார். இறுதிச்சுற்றில் அவர் பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Post

இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று : புதிதாக 46,759 பேருக்கு தொற்று..

Sat Aug 28 , 2021
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை ஓய்ந்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக கொரொனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.கொரோன தொற்று தொடர்ந்து 3வது நாளாக 40 ஆயிரத்திற்கும் கூடுதலாக உறுதி செய்யப்படுவது பெரும் இன்னல்களை ஏற்படுத்துகிறது. நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் 46,759 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,26,49,947 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று பாதிப்புக்கு ஒரே […]
vaccine-covid19
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய