இந்திய கிரிக்கெட் அணி விளையாடவுள்ள தொடர்களின் அட்டவணை – 2021 (IPL – T20 World Cup வரை ) !!

இந்திய கிரிக்கெட் அணியானது 2021 ஆம் ஆண்டு தொடக்க முதலிலிருந்து, இறுதி வரை பல்வேறு கிரிக்கெட் தொடர்களை ஆட உள்ளது .கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2021 ஆம் ஆண்டு மிகப் பெரிய விருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .

இந்திய கிரிக்கெட் அணியானது 2021 ல் ஒரு நாள் கிரிக்கெட் தொடர் ,டி20 தொடர் மற்றும் அதிக எண்ணிக்கையிலான டெஸ்ட் தொடர்களிலும் விளையாட உள்ளது .ஒரே வருடத்தில் 9 டெஸ்ட் தொடர்களை இந்திய அணி விளையாட உள்ளது .இந்திய -ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மீதமுள்ள டெஸ்ட் தொடர்கள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி முதல் மூன்று வாரங்களில் நடைபெறும் .

இந்தியா – ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்கள்

3 வது டெஸ்ட் தொடர் – ஜனவரி 7 -11 ,சிட்னி
4 வது டெஸ்ட் தொடர் – ஜனவரி 15 – 19 ,பிரிஸ்பேன்

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கான தொடர்கள்

இந்தியா -இங்கிலாந்து அணிகளுக்கான கிரிக்கெட் தொடர் அட்டவணையை BCCI அமைப்பு சமீபத்தில் வெளியிட்டது .

2021 ஆம் ஆண்டில் இங்கிலாந்து அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது .இவ்விரு அணிகளும் 3 ஒரு நாள் போட்டிகள் ,4 டெஸ்ட் தொடர்கள் மற்றும் 5 டி20 தொடர்களில் பங்கேற்க உள்ளது .இப்போட்டிகள் இந்தியாவில் கொரோன அச்சுறுத்தல் காரணமாக சென்னை ,ஆமதாபாத் மற்றும் புனே போன்ற இடங்களில் மட்டுமே நடைபெற உள்ளது .

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட் ,சென்னை – பிப்ரவரி 5 – 9
2 வது டெஸ்ட் ,சென்னை – பிப்ரவரி 13 – 17
3 வது டெஸ்ட் ,ஆமதாபாத் – பிப்ரவரி 24 – 28
4 வது டெஸ்ட் ,ஆமதாபாத்- மார்ச் 4 – 8

டி20 தொடர் (ஆமதாபாத்)

முதல் டி 20 – மார்ச் 12
2 வது டி 20 – மார்ச் 14
3 வது டி 20 – மார்ச் 16
4 வது டி 20 – மார்ச் 18
5 வது டி 20 – மார்ச் 20

ஒரு நாள் தொடர்கள் (புனே)

முதல் ஒரு நாள் – மார்ச் 23
இரண்டாவது ஒரு நாள் – மார்ச் 26
மூன்றாவது ஒரு நாள் – மார்ச் 28

இங்கிலாந்து -இந்தியா டெஸ்ட் தொடர்கள்

இந்திய கிரிக்கெட் அணியானது இங்கிலாந்தில் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்களில் 5 டெஸ்ட் தொடர்களை விளையாட உள்ளது .இந்த போட்டிக்கான அட்டவணையானது கடந்த நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது .

முதல் டெஸ்ட் – ஆகஸ்ட் 4 – 8 (நாட்டிங்காம் )
2 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 12 – 16 (லார்ட்ஸ்)
3 வது டெஸ்ட் – ஆகஸ்ட் 25 – 29 (லீட்ஸ்)
4 வது டெஸ்ட் – செப்டம்பர் 2 – 6 (தி ஓவல் )
5 வது டெஸ்ட் – செப்டம்பர் 10 – 14 (மான்செஸ்டர்)

Next Post

தென்னிந்திய சினிமா விருதுகள் : தாதாசாகிப் பால்கே விருது பெற்ற கலைஞர்கள் - 2020 ??

Sat Jan 2 , 2021
தாதாசாகிப் பால்கே விருது ஆண்டுதோறும் தமிழ் ,தெலுங்கு,மலையாள ,கன்னட திரைக்கலைனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது .2020 ஆம் ஆண்டிற்கான தாதாசாகிப் பால்கே விருது பெற்ற தமிழ் கலைஞர்களில் ,சிறந்த நடிகருக்கான விருதை தனுஷ் அவர்களும் ,சிறந்த நடிகைக்கான விருதை ஜோதிகா அவர்களும் பெற்றனர் . சிறந்த பன்முகத் திறமை கொண்ட நடிகராக ,நடிகர் அஜித் குமார் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் .இந்த ஆண்டில் சிறந்த தமிழ் படமாக டூலெட் படம் தேர்வாகியுள்ளது . தாதாசாகிப் […]
dadashaheb-phalkhe-award-2020-in-tamil-movies
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய