
ஒடிசா மாநிலத்தின் பாலாசூர் கடற்கரையில் இன்று (வெள்ளிக்கிழமை) நவீன ஏவுகணை சோதனை ஆனது வெற்றிகரமாக நடத்தப்பட்டது .
தரையில் இருந்து வானில் உள்ள இலக்கை துல்லியமாக அழிக்கும் நவீன ஏவுகணை சோதனை ,அதன் இலக்கை அழித்து வெற்றிகரமாக செயல்பட்டது என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு கழகம் அறிவித்துள்ளது .
நவீன ஏவுகணை சோதனை ஆனது 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட Q.R.S.A.M ஏவுகணை ஆனது வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என DRDO அமைப்பு தெரிவித்துள்ளது .
இந்தியாவின் நவீன ஏவுகணை சோதனை வெற்றியடைந்தது , இந்திய ராணுவத்திற்கு மேலும் வலுவை சேர்க்கும் என உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் .
எதிரி நாட்டு ஏவுகணைகளை துல்லியமாக தாக்கி அழிக்கும் ,இந்த நவீன ஏவுகணை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது .