சீனா ,இந்திய எல்லை பகுதியான லடாக்கில் 38000 சதுர கிலோ மீட்டர் பகுதியை ஆக்கிரமித்துள்ளது- ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்க் மாநிலங்களவையில் அறிக்கை வெளியிட்டார் .

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை:

இந்திய எல்லையில் சீனா ஊடுருவல் மற்றும் அத்துமீறல் குறித்து மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று அறிக்கை தாக்கல் செய்தார்.

சீனா ,இந்தியாவின் எல்லைப் பகுதியில் பல இடங்களை ஆக்கிரமிப்பு செய்துள்ளது. லடாக் பகுதியில் உள்ள சுமார் 38000 சதுர கிலோ மீட்டர் நிலத்தை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது.

அத்துடன் பாகிஸ்தான் அரசு ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 5,180 சதுர கி.மீ. இந்திய பகுதியை சட்டவிரோதமாக சீனாவிற்கு வழங்கி உள்ளது.இது சீனா -பாகிஸ்தான் எல்லை ஒப்பந்தம் என்று அழைக்கப்படும் ஒப்பந்தத்தின் கீழ் நடைபெற்றது .

இந்தியாவின் ,அருணாச்சல பிரதேச எல்லையின் கிழக்கு செக்டாரில் 90000 சதுர கிலோ மீட்டர் இந்திய பகுதியை சீனா சொந்தம் கொண்டாடுகிறது.

இந்தியாவும் சீனாவும் எப்பொழுதும் எல்லையில் அமைதியை நிலை நாட்டை வேண்டும் என்றே விரும்புகிறது .இதன் தொடர்ச்சியாக பலமுறை எல்லை வரையறை செய்வது குறித்து இரு நாடுகளும் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இதனை இந்த அவை புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது , தற்போதைய சூழ்நிலையில், என்னால் விவரிக்க முடியாத சில உணர்வுபூர்வமான செயல்பாட்டு சிக்கல்கள் உள்ளன. இதனை இந்த அவை(மாநிலங்களவை) புரிந்துகொள்ளும் என்று நம்புகிறேன்.

Next Post

காலச் சுவடுகள் -செப்டம்பர் - 18

Fri Sep 18 , 2020
18-செப்டம்பர் -1803 சர் ஆர்தர் வெல்லஸ்லியின் கீழ் நடந்த இரண்டாவது ஆங்கிலோ-மராத்தா யுத்தத்தின் விளைவாக அசாயில் மராட்டியர்கள் தோல்வியடைந்தனர். பிரிட்டிஷ் கிறிஸ்தவர்கள் டெல்லியைக் கைப்பற்றி இந்தியாவின் பெரும் பகுதிகளின் கட்டுப்பாட்டைப் பெற்றனர். 18-செப்டம்பர் -1803 பூரி எந்த போராட்டமும் இல்லாமல் மராட்டியர்களிடமிருந்து பிரிட்டிஷாரால் கைப்பற்றப்பட்டார். 18-செப்டம்பர் -1867 சிறந்த ஓவியர், தேசபக்தர் மற்றும் கலைஞரான கங்கனேந்திரநாத் தாகூர் கல்கத்தாவில் பிறந்தார். 18-செப்டம்பர் -1879 இந்தியாவில் அமெரிக்க வயது வந்த கல்வியாளரான […]
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய