
ஐபில் போட்டிகளில் பங்கேற்கும் இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் வீரர்கள் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் தனிமைப்படுத்தப்பட்டு ,அவர்களுக்கான பயிற்சி ஆட்டங்களை அருகில் உள்ள பயிற்சி மையங்களில் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது .
ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் அமைப்புக்கும் ,நியூ சவுத் வேல்ஸ் அரசுக்கும் இடையே ஏற்பட்ட முடிவில் விளையாட்டு வீரர்களை தனிமைப்படுத்துதல் மற்றும் அவர்களுக்கான பயிற்சி ஆட்டங்கள் தொடர்பான முடிவு எடுக்கப்பட்டுள்ளது .இந்த முடிவிற்கு பிசிசிஐ அமைப்பு ஒப்புக்கொள்ளும் தருவாயில் இந்தியா -ஆஸ்திரேலியா இடையேயான கிரிக்கெட் தொடர்களுக்கான அட்டவணை அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் .
இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்வதற்கான மாதிரி அட்டவணை :
ஒரு நாள் தொடர்கள்:
முதல் ஒருநாள் தொடர் : நவம்பர் 27 ,சிட்னி
இரண்டாவது ஒரு நாள் தொடர் : நவம்பர் 29,சிட்னி
மூன்றாவது ஒரு நாள் தொடர் : டிசம்பர் 1 ,கென்பரா
T20 தொடர்கள் :
முதல் t20 தொடர் : டிசம்பர் 4 ,கென்பரா
2 -வது t20 தொடர் :டிசம்பர் 6 ,சிட்னி
3 -வது t20 தொடர்:டிசம்பர் 8 ,சிட்னி
டெஸ்ட் தொடர்கள் :
முதல் டெஸ்ட் :டிசம்பர் 17 – 21 ,அடிலெய்ட்
2 -வது டெஸ்ட் :டிசம்பர் 26 – 30 ,மெல்போர்ன்
3 -வது டெஸ்ட் :ஜனவரி 7 – 11 ,சிட்னி
4 -வது டெஸ்ட் :ஜனவரி 15 – 19 ,பிரிஸ்பேன்