இல்லம் தேடிக் கல்வி – தன்னார்வலர்களுக்கான பயிற்சி மற்றும் வழிமுறைகள் வெளியீடு.,

இல்லம் தேடி கல்வி திட்டத்தின் மூலம் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையிலும் இடைநிற்றலை முற்றிலும் களைவதற்கும் ஏற்றவகையில் செயல்படுத்தப்பட உள்ள ஒரு திட்டமாகும்.

மேலும், இத்திட்டமானது குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுப் பரவல் காரணமாக 1 முதல் 8 வகுப்புகள் வரை பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை ஈடுசெய்வதற்காகத் தன்னார்வலர்களைக் கொண்டு செயல்படுத்தப்படுவதாகும்.மேலும் தன்னார்வலர்களைக் கொண்டு தினசரி 1 முதல் 1 % மணிநேரம் ( மாலை 5.00 மணிமுதல் 7.00 மணிக்குள் ) மாணவர்களுக்கு கற்றல் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னார்வலர்களுக்கு இல்லம் தேடிக் கல்வியின் முக்கியத்துவம் , தன்னார்வலர்கள் பங்களிப்பின் அவசியம் மற்றும் முக்கியத்துவம் , தன்னார்வலர்களை ஊக்கப்படுத்துதல் , குழந்தைகளை கையாள வேண்டிய விதம் மற்றும் கற்றல் கற்பித்தல் குறித்தும் முதற்கட்டமாக இருநாள்கள் பயிற்சி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

மேலும் இப்பயிற்சியானது குறுவளமைய பயிற்சியாக 1 – 5 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு ஒரு பிரிவாகவும் 6-8 வகுப்புகளை கையாளும் தன்னார்வலர்களுக்கு மற்றொரு பிரிவாகவும் வழங்கப்படவுள்ளது.

Next Post

இந்தியாவில் புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை - மருத்துவ நிபுணர்கள்..

Sat Nov 13 , 2021
இந்தியாவில் தற்போது புதிதாக கொரோனா உருமாற்றம் அடையவில்லை என மருத்துவ நிபுணர்கள் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பல்வேறு நாடுகளிலும் பல வகைகளாக உருமாற்றம் அடைந்தது .அந்த வகையில் 2 முறை உருமாற்றம் அடைந்த டெல்டா வைரஸ் அதிக வீரியம் கொண்டதாக மாறியது. அதுதான் இந்தியாவில் 2-வது அலையை ஏற்படுத்தியது. தற்போது இந்த வைரஸ் மேலும் உருமாற்றம் அடைந்து பரவத் தொடங்கியது. டெல்டாவில் இருந்து உருமாறிய ஏஒய்.4.2 வைரஸ் […]
mutated-corona-in-india-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய