ICSE – 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு..

1

ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்படுவதாகவும்,மேலும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது நாடு முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது.இதன் காரணமாக சிபிஎஸ்இ பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்டது,இதனைத் தொடர்ந்து தற்போது ஐசிஎஸ்இ பாடத்திட்டத்தின் பொதுத்தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து ICSE வெளியிட்ட அறிக்கையில்,இந்தியா முழுவதும் கொரோனாவின் முதல் அலையை விட,இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.பல மாநிலங்களில் முழு பொது முடக்கமும் ,இரவு நேர பொதுமுடக்கமும் அமல் படுத்தப்பட்டு வருகிறது.கொரோன தொற்று மற்றும் மாணவர்களின் நலன் கருதி ,ஐசிஎஸ்இ(ICSE) பாடத்திட்டத்தின் 12ஆம் வகுப்பு தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது.

சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து : 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு

மேலும்,10ஆம் வகுப்பிற்கு இரண்டு விருப்பங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. ஒன்று தேர்வு எழுதாமல், உள்மதிப்பீட்டின் மூலம் மதிப்பெண் பெற்றுக் கொள்வது அல்லது பின்னர் அறிவிக்கப்படும் தேதியில் தேர்வு எழுதுவது போன்ற விருப்பமுறை கொடுக்கப்பட்டுள்ளது.தேர்வுக்கான புதிய தேதி குறித்த இறுதி முடிவு ஜூன் முதலாவது வாரத்தில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளனர்.

One thought on “ICSE – 10 ஆம் வகுப்பு தேர்வு ரத்து: 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைப்பு..

Comments are closed.

Next Post

இந்தியாவில் அதி தீவிரமடையும் கொரோனா பாதிப்பு : இன்று புதிதாக 2,34,692 பேருக்கு தொற்று..

Sat Apr 17 , 2021
இந்தியா முழுவதும் கொரோனாவின் இரண்டாவது அலை தீவிரமடைந்து பரவி வருகிறது.இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் தொற்று அதிவேகமாக பரவி வருவதன் காரணமாக,முழு பொதுமுடக்கம்,இரவு நேர பொதுமுடக்கத்துடன் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தற்போது,நாடு முழுவதும் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 14.05 கோடியைத் தாண்டியுள்ளது. இன்று காலை நிலவரப்படி, இந்தியா முழுவதும் புதிதாக 2,34,692 பேருக்கு கொரோனா […]
covid-second-wave-test-2021
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய