இந்தியாவில் தற்போது கொரோனாவின் இரண்டாவது அலை அதி தீவிரமாக பரவி வருகிறது.இதனால் பல்வேறு துறைகளில் நடைபெற இருந்த பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டும்,ஒத்திவைக்கப்பட்டும் வருகின்றன. இதனைத் தொடர்ந்து மே மாதத்தில் நடைபெற இருந்த சி.ஏ தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக இந்தியக் கணக்குத் தணிக்கையாளர் அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது.இதன் காரணமாக வரும் மே மாதம் 21ம் தேதி நடைபெற இருந்த இறுதித்தேர்வு மற்றும் மே 22ஆம் தேதி நடைபெற இருந்த இடைநிலைத் தேர்வு ஆகிய இரண்டு தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பு அறிவித்துள்ளது.
தேர்வு நடைபெறும் தேதியானது தேர்வுகள் நடைபெறும் 25 நாட்களுக்கு முன்னதாக அறிவிக்கப்படும் என்று ஐசிஏஐ தெரிவித்துள்ளது.
