
ஹுவாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய வகை ஸ்மார்ட்போன்(Huawei Mate x 2) ஆனது தற்போது அரியவகை சிறப்பம்சங்களுடன் வெளியாக உள்ளது .
தற்போது உலக அளவில் ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியானது நாளுக்கு நாள் புதிய பரிணாமங்களை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது .இந்நிலையில் செல்போன்களின் வளர்ச்சியில் புதிய தாக்கத்தை ஏற்படுத்திய சீனாவின் ஹுவாய் நிறுவனம் மடிக்கக்கூடிய வகையிலான செல்போன்களை தயாரித்துள்ளது .
ஹுவாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள மடிக்கக்கூடிய வகையிலான ஸ்மார்ட்போனுக்கு மேட் எக்ஸ் 2(Huawei Mate x 2) என பெயரிடப்பட்டுள்ளது .இந்த வகை ஸ்மார்ட்போன்கள் சாம்சங் கேலக்சிபோல்ட் போன்று உட்புறமாக மடிக்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது .சீனாவால் தயாரிக்கப்பட்ட இந்த வகை ஸ்மார்ட்போன் (Huawei Mate x 2 )ஆனது கடந்த வருடமே சந்தையில் வெளியாக இருந்த நிலையில் ,அமெரிக்கா விதித்த தடை காரணமாக வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டிருந்தது.
ஹுவாய் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் ஆனது முன்பு வெளிவந்த ஸ்மார்ட்போன் போன்று இல்லாமல் ,இதில் ஸ்கிரீன் 9000 என்ற அதிவேகத்தில் செயல்படக்கூடிய ப்ரோசசரை(Processor) கொண்டுள்ளது .
ஹுவாய் நிறுவனத்தின் மேட் எக்ஸ் 2(Mate X 2) செல்போனானது வரும் 22 ஆம் தேதிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .