பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்துவது எப்படி ?

தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது.தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களில் அடுத்த இரு வாரங்களில் கொரோனா 2-வது அலை உச்சத்தை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பில் தமிழகம் தற்போது முதலிடத்தை பிடித்துள்ளது.கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு தற்போது ஆக்சிஜன் அளவு மிகவும் குறைந்து வருகிறது.இதனால் ஆக்சிஜன் தட்டுப்பாடு மாநிலம் முழுவதும் நிலவி வருகிறது. ஆக்சிஜன் அளவை கண்டுபிடிக்க பல்ஸ் ஆக்சி மீட்டரை நிறைய பேர் பயன்படுத்துகின்றனர். பல்ஸ் ஆக்சி மீட்டரை பயன்படுத்தும் முறை பற்றி தமிழக சுகாதாரத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

  • பல்ஸ் ஆக்சி மீட்டர் கருவியை பயன்படுத்துவதற்கு முன் விரல்களை கிருமி நாசினியால் நன்றாக சுத்தம் செய்யவும்.
  • 10 நிமிடம் நிதானமாக அமர்ந்த பின் உங்கள் ஆக்சிஜன் (O2) அளவை சரிபாக்கவும்.
  • ஆள்காட்டி விரல் அல்லது நடுவிரலில் கருவியை பொருத்த வேண்டும்.
  • பல்ஸ் ஆக்சி மீட்டரில் தெரியும் ஆக்சிஜன் அளவும், நாடி துடிப்பும் சீராக தெரியும் வரை காத்திருக்கவும்.
  • சில விநாடிகளுக்கு பிறகு ஆக்சிஜன் அளவையும், நாடி துடிப்பையும் குறித்து கொள்ளவும்.
  • விரல்களில் மருதாணி, நகபூச்சு, ஈரம் மற்றும் குழுமை ஆகியவை இருந்தால் அது ஆக்சிஜன் அளவை தவறாக காட்ட கூடும்.
    *எனவே ஆக்சிஜன் அளவு 94% கீழ் இருந்தால் மற்ற கையில் உள்ள விரல்களில் கருவியை பொருத்தி பார்க்கவும்.
  • தொடர்ந்து 94% கீழ் இருந்தால் மருத்துவ உதவியை நாடவும். மேலும் மருத்துவ உதவிக்கு இலவச சேவை உதவி மையம் 104 அணுகலாம்.

Next Post

பிளஸ் 12 மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அலகுத்தேர்வு : வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு

Wed May 19 , 2021
அரசுத் தேர்வுகள் இயக்கம்,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்துவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் காரணமாக 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு வாட்ஸ் அப் மூலம், அலகுத்தேர்வு நடத்த அரசுத் தேர்வுகள் இயக்கம் திட்டமிட்டுள்ளது. வாட்ஸ் அப்-ல், மாணவியருக்கு தனியாகவும், மாணவர்களுக்கு தனியாகவும் குழு (Group) ஒன்றை […]
plus2-students-class-using-whatsapp
கோவிட்-19
தற்போதைய பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இறப்பு விகிதம்
மேலும் அறிய
கோவிட்-19
மொத்த பாதிப்பு
மேலும் அறிய
கோவிட்-19
இன்றைய கொரோனா நிலவரம்
மேலும் அறிய